உலகையே உலுக்கிய கொரோனா உருவான ‘வூஹான்’ நகரம் இப்போ எப்படி இருக்கு..? 66 வயது தாத்தா சொன்ன அசரவைக்கும் பதில்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரம் தற்போது எப்படி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வூஹான் நகரில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்து சியோங் லியான்ஷெங் என்ற 66 வயது நபர் கூறுகையில், ‘வூஹான் இப்போது சீனாவின் பாதுகாப்பான நகரம். ஏன் உலகத்திலே பாதுகாப்பான நகரம் என்றுகூட சொல்லலாம். தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த வூஹான் மக்களுக்கு விழிப்புணர்வு மிக அதிகம். என் இரண்டு வயது பேரன் கூட வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டுதான் செல்வான்’ என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வூஹானில் கொரோனா பாதிப்பு மிக குறைவாக உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பார்க், ஆற்றங்கரை என காதலர்கள் அச்சமின்றி சுற்றி வருகின்றனர். இதுதொடர்பாக தெரிவித்த வயதான சீன தம்பதியினர், ‘வூஹான் மக்கள் அனைவரும் நகரத்தில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள். நாங்களும் இங்கு வந்து தினமும் மகிழ்ச்சியுடன் ஆடல் பாடலுமாக உற்சாகமாக இருக்கிறோம்’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 2021ம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு நள்ளிரவில் வூஹான் நகர மக்கள் பலூன்களை பறக்கவிட்டு கொண்டாடினர்.
மற்ற செய்திகள்