'எங்க உதவி வேணுமா'?... 'நாங்க ஹெல்ப் பண்ண தயாரா இருக்கோம்'... சீன அதிபர் ஜி ஜின்பிங்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் பல உலக நாடுகள் தங்கள் ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது.

'எங்க உதவி வேணுமா'?... 'நாங்க ஹெல்ப் பண்ண தயாரா இருக்கோம்'... சீன அதிபர் ஜி ஜின்பிங்!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கடும் உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவுக்குத் தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடுவதில் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கச் சீனா தயாராக உள்ளது.

Xi Jinping Offers To Help India Fight Covid: Chinese State Media

இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்கச் சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு உதவத் தயார் எனச் சீனா வெளியுறவுத்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்