வௌவ்வாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குகை ஒன்றில் ஆராய்ச்சிக்காக சென்றபோது வுகான் வைரலாஜி நிறுவனத்தில் பணியாற்றிய விஞ்ஞானியை வௌவ்வால் கடித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வௌவ்வாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் வௌவ்வால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ளனர்.

Wuhan lab scientists admit to being bitten by bats

இந்நிலையில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வுகான் நகரில் உள்ள ஒரு குகையில், கடந்த 2017-ம் ஆண்டு வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த விஞ்ஞானி ஒருவர் வௌவ்வாலிடம் கடி வாங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Wuhan lab scientists admit to being bitten by bats

இதுதொடர்பாக டெய்லி மெயில் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சீனாவில் ‘வௌவ்வால் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி (Shi Zhengli) தனது குழுவுடன் வுகானில் உள்ள ஒரு குகைப்பகுதிக்கு 2017-ம் ஆண்டு சென்றுள்ளார். ‘சார்ஸ்’ (SARS) வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர்கள் வௌவ்வாலை பிடித்து பரிசோதனை செய்துள்ளனர்.

Wuhan lab scientists admit to being bitten by bats

அந்த குழுவில் இடம்பெற்றிருந்த வைரஸ் ஆராய்ச்சிளர் சியூ ஜியி (Cui Jie) என்பவர், குகையில் பிடித்த ஒரு வௌவ்வாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது சியூ ஜியி தனது கையில் பிடித்திருந்த வௌவ்வால் அவரை கடித்துள்ளது. கையுறை அணிந்திருந்த போதிலும் வௌவ்வாலின் கடித்தது ‘ஊசி குத்தியது’ போல இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

Wuhan lab scientists admit to being bitten by bats

இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு சென்றபோது அந்த குழுவினர் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடை அணியவில்லை. சாதாரண உடை மற்றும் கையுறை மட்டுமே அவர்கள் அணிந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wuhan lab scientists admit to being bitten by bats

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் குழுவினர் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ள நிலையில், 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக வெளியான இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

News Credits: DailyMail

மற்ற செய்திகள்