'கொரோனா வெறியாட்டம்...' 'பலியானோர் எண்ணிக்கை 15,372 ஆக அதிகரிப்பு...' 'உடனடி' தகவல்களை இந்த 'இணையதளத்தில்' காணலாம்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா கோரத்தாண்டவம் குறித்த தகவல்களை https://www.worldometers.info/coronavirus/ என்ற இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. ஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று மாலை நிலவரப்படி 15 ஆயிரத்து 372 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் மூன்றரை லட்சம் மக்களைஇந்த வைரஸ் தாக்கியுள்ளது.
இத்தாலியில் இதுவரை 5 ஆயிரத்து 476 பேரும், சீனாவில் 3 ஆயிரத்து 270 பேரும், ஸ்பெயின் நாட்டில் 2 ஆயிரத்து 182 பேரும், ஈரானில் ஆயிரத்து 812 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் புதிதாக உலகம் முழுவதும் 14 ஆயிரத்து 303 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 ஆயிரத்து 295 பேரின் நிலை மிக மோசமாக உள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் 13 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். 87 சதவீதம் பேர் குணமாகி வீட்டுக்குச் சென்றுள்ளனர்.