‘உலகில் எந்த யானைக்கும் நடக்காத கொடுமை’.. இனிமேலாவது ‘சந்தோஷமாக’ இருக்கட்டும்.. மக்கள் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகிலேயே அதிக காலம் தனிமையில் வாழ்ந்த காவன் யானை மற்றொரு யானையுடன் கைகோர்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாகிஸ்தானில் யானைகள் இல்லாததால் கடந்த 1985ம் ஆண்டு காவன் என்ற 1 வயது யானைக்குட்டியை இலங்கையிடமிருந்து வாங்கியது. இதனை அடுத்து இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் வளர்ந்து வந்த காவன் யானைக்கு துணையாக மீண்டும் இலங்கையிடமிருந்து 1990ம் ஆண்டு சஹோலி என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது. இந்த இரு யானைகளும் மிருகக்காட்சிசாலையில் ஒன்றாக வளர்ந்து வந்தன.
பாகிஸ்தான் நாட்டின் வெப்பம் யானைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் ஒரு நாள் சஹோலி பெண் யானை திடீரென இறந்தது. நீண்ட நாள்களாக ஜோடியாக சுற்றித்திரிந்த சஹோலியின் இறப்பை காவன் யானையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் காவன் யானை கொட்டகையை விட்டு நீண்ட நாள்களாக வெளியே வரவில்லை. மேலும் தனிமை வாட்டியதால் சுவரில் தனது தலையை முட்டிக்கொண்டு எப்போதும் சோகமாக நின்றது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் காவன் யானைக்கு ஆதரவாக விலங்கியல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலரும் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். மேலும் யானையை அதன் சூழலுக்கு ஏற்ற ஒரு சரணாலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குறைந்தபட்சம் அதற்கு ஒரு துணை யானையையாவது கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
ஆனால் இதை எதையுமே சரணாலய அதிகாரிகள் செவிக்கொடுத்து கேட்ததால், இந்த பிரச்சனை நீதிமன்றம் சென்றது. காவன் யானையில் நிலையை உணர்ந்த நீதிபதிகள் யானையை விடுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். இதனை அடுத்து காவன் யானை கம்போடியாவில் உள்ள சரணாலயத்துக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் விமானம் மூலம் காவன் யானை கம்போடியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. கம்போடியா சென்ற பின்னர் அங்குள்ள யானை ஒன்றிற்கு காவன் யானை உற்சாகமாக கை கொடுத்தது. சுமார் 8 வருடங்களுக்கு பிறகு காவன் யானை மற்றொரு யானையை தற்போதுதான் பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையின் நீண்ட நாட்கள் தனிமையில் கழித்த காவன் யானை இனிமேலாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்