1992-ல் அனுப்பப்பட்ட 'மெசேஜ்' ஒரு கோடிக்கு ஏலம்...! அப்படி 'என்ன' ஸ்பெஷல்...? - வோடபோனுக்கு அடித்த ஜாக்பாட்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் முதன்முதலில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திக்கு அடித்த ஜாக்பாட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

1992-ல் அனுப்பப்பட்ட 'மெசேஜ்' ஒரு கோடிக்கு ஏலம்...! அப்படி 'என்ன' ஸ்பெஷல்...? - வோடபோனுக்கு அடித்த ஜாக்பாட்...!

தற்போதைய நவீன காலக்கட்டத்தில் இணையம் உதவியோடு உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடப்பதை உட்காந்த இடத்தில் நம்மால் பார்க்க முடியும். இப்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயலிகள் காரணமாக  குறுந்தகவல் சேவையான எஸ்எம்எஸ் கிட்டத்தட்ட பலருக்கும் மறந்துவிட்டது.

world's first xmas message sent auction for one crore rupees

ஒரு நாளைக்கு இருக்கும் 100 எஸ். எம். எஸ்ஸை எண்ணி எண்ணி பலருக்கு அனுப்பிய காலகட்டம் உண்டு. ஆனால், இந்த குறுஞ்செய்தியை முதல் முதலில் அனுப்பி 30 வருடங்கள் ஆகிறதாம்.

1992-ஆம் ஆண்டு வோடஃபோனின் பிரிட்டிஷ் ஊழியர் ஒருவரால் 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்ற குறுஞ்செய்தி தான் உலகிலேயே முதன்முதலில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி. அனுப்பியவரின் பெயர் நீல் பாப்வொர்த்.

புரோகிராமரான நீல் பாப்வொர்த் தனது சக ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்ற 14 எழுத்துக்கள் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். நீல் இதனை தனது ஆர்பிட்டல் 901 மொபைல் (Orbital 901 Mobile Handset)  கைபேசியில் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு அந்த எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

201-ஆம் ஆண்டு நீல் இதுக்குறித்து ஒருமுறை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதில், '1992-ல் இந்த எஸ்எம்எஸ் அனுப்பிய போது இந்த எஸ்எம்எஸ் இவ்வளவு பிரபலமாகும் என்று எனக்கு தெரியாது. நான் இதுக்குறித்து என் குழந்தைகளிடமும் கூறியிருந்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்த 'மெர்ரி கிறிஸ்மஸ்' குறுஞ்செய்தியின் டிஜிட்டல் நகலை தற்போது ஏலம் விட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்ற குறுஞ்செய்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.

மேலும், ஏலத்தில் கிடைக்கும் வருமானம் UNHCR-UN Refugee Agencyக்கு வழங்கப்படும் எனவும் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

XMAS, MESSAGE, AUCTION, ONE CRORE RUPEES, குறுஞ்செய்தி, ஏலம், ஒரு கோடி, MERRY CHRISTMAS

மற்ற செய்திகள்