‘உலகின் முதல் கொரோனா நோயாளி மாயம்’?!.. பரபரப்பை கிளப்பிய உலக சுகாதார அமைப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முதல் கொரோனா நோயாளி மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாகவும், அவர் கண்டுபிடிக்கப்படாமலே போக வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் ரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய ஹுவாங் யான்லிங் (Huang Yanling) என்ற பெண்தான் உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார். சீனா அதிகாரப்பூர்வமாக கொரோனாவை ஒப்புக்கொள்வதற்கு சில மாதங்கள் முன்பே யான்லிங்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
யான்லிங் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள வுகான் வைரஸ் ஆய்வு நிறுவனம், அவர் அந்நிறுவனத்தில் படித்து முடித்ததும் வேறொரு இடத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீ சாட் தளத்தில் தோன்றிய யான்லிங், தான் உயிருடன் இருப்பதாகவும், தனக்கு கொரோனா என்பதெல்லாம் பொய் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு பின்னர் யான்லிங் மாயமாகிவிட்டார். அவர் சீனாவால் மறைக்கப்பட்டு இருக்கலாம், அல்லது அவர் இறந்துபோய் அவரது உடல் ரகசியமாக எரிக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் உலா வருகின்றன. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்றும், அமெரிக்கா பரப்பிய பொய்கள் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
News Credits: DailyMail
மற்ற செய்திகள்