"ரிட்டையர் ஆகுற எண்ணமே வரல".. இளைஞர்களுக்கே Tough கொடுக்கும் இரண்டாம் உலகப்போர் வீரர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்ட வீரர் ஒருவர் இப்போதும் வேலைக்கு சென்றுவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | உலகத்துல ரொம்ப டேஞ்சரான ஜெயில்.. பதறவைக்கும் வரலாறு.. 60 வருஷத்துக்கு அப்பறம் பிறந்த விடிவுகாலம்..!
இரண்டாம் உலகப் போர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பில் ஹாட்ஜ்சன். இவருக்கு தற்போது 102 வயதாகிறது. தன்னுடைய இளமை காலத்தில் தாய் நாட்டுக்காக இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்றார் பில். அதன் பிறகு 1962 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகிய பில், வீட்டில் எதுவும் செய்யாமல் இருக்க விரும்பாமல் புதிய வாழ்க்கையை தேட துவங்கினார். அப்படி, ஒவ்வொரு வருடமும் புதிதாக ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார் பில்.
பொம்மைகள்
இதன் பலனாக மைன்கிராஃப்ட் எனப்படும் சிறிய ரக மரப் பொருட்கள் செய்யும் கலையை பில் கற்க, அவருக்கு அது மிகவும் பிடித்துப்போய்விட்டது. சதர்லேண்ட் ஷைர் பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பு மற்றும் மறுசீரமைப்பு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார் பில். அன்று துவங்கி கடந்த 15 ஆண்டுகளாக குழந்தைகளுக்கான மர பொம்மைகளை இவர் தயாரித்து வருகிறார்.
தனிமை
தற்போது 102 வயதான பில், நாள்தோறும் இந்த நிறுவனத்திற்கு வந்துவிடுகிறார். இளைஞர்களுடன் போட்டிபோட்டு உழைக்கும் இவர் தனக்கு ஓய்வுபெறும் எண்ணமே வரவில்லை என்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய மனைவி காலமானார். இதனால், மனம் உடைந்த பில், தனிமையில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் வழியாக இந்த வேலையை கருதுவதாக கூறுகிறார்.
வருத்தமில்லை
சிறுவர்கள் விரும்பும் சிறிய வடிவிலான நாற்காலிகள், கட்டில்கள் போன்றவற்றை உருவாக்குவதில் வல்லவராக திகழும் பில் தனக்கு இந்த வேலை மன நிறைவை தருவதாகக் கூறுகிறார். மேலும் பில் தயாரித்த பொருட்களை மக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் செல்வதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுபற்றி அவர் பேசுகையில்," இந்த வயதில் பணிபுரிவது குறித்து எனக்கு எப்போதும் வருத்தங்களோ குறைகளோ இருந்ததில்லை" என்றார்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரரான பில், தனது 102 வயதிலும் தினந்தோறும் பணி செய்துவருவது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துவருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்