'காற்றிலும் பரவுகிறதா கொரோனா'!? - திடீரென வெளியான 'அதிர்ச்சி தகவலால்' விஞ்ஞானிகள் குழப்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்'கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது, உலகசுகாதார அமைப்பு பரிந்துரைகளை திருத்த வேண்டும்' என்று 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
காற்றில் சிறிய துகள்களில் உள்ள கொரோனா வைரஸ் மக்களை பாதிக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்களை 32 நாடுகளில், குறைந்தது 239 விஞ்ஞானிகள் கோடிட்டுக் காட்டினர். மேலும், பரிந்துரைகளைத் திருத்துமாறு உலக சுகாதார நிறுவனத்தை கேட்டுக் கொண்டனர் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் நோய் மூக்கு அல்லது வாயிலிருந்து சிறிய துளிகளால் மூலமாக ஒருவருக்கு பரவுகிறது; இது கொரோனா நோயாளி இருமல், தும்மும்போது அல்லது பேசும்போது வெளியேற்றப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது
அடுத்த வாரம் ஒரு விஞ்ஞான இதழில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட திட்டமிட்டுள்ள ஆய்வுகளை ஒரு திறந்த கடிதத்தில் எழுதி உலக சுகாதார அமைப்புக்கு எழுதி உள்ளனர்
32 நாடுகளில் 239 விஞ்ஞானிகள் காற்றில் பரவும் சிறிய துகள்கள் மக்களைப் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டும் ஆதாரங்களை அதில் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
தும்மும் போது காற்றில் பரவும் பெரிய நீர்த்துளிகளால் அல்லது காற்றோட்டம் இல்லாத அறையின் மிகச் சிறிய வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகளால் எடுத்துச் செல்லப்பட்டாலும், கொரோனா வைரஸ் காற்று வழியாகப் பரவுகிறது மற்றும் மக்கள் சுவாசிக்கும் போது இதனால் பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், வைரஸ் காற்றில் பறந்ததற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்