Oh My Dog
Anantham Mobile

உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்.. யம்மாடி இவ்வளவு வயசா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிக வயதான பெண்மணியான கேன் டனாகா தன்னுடைய 119 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்.. யம்மாடி இவ்வளவு வயசா?

Also Read | கொதிக்கிற பாலைவனத்துல சிக்கிக்கிட்ட 86 வயசு பாட்டி.. கொஞ்சம் கூட யோசிக்காம இளம் பெண் போலீஸ் எடுத்த முடிவு.. கொண்டாடிய மக்கள்..!

பிறப்பு

ஜப்பானின் தென் மேற்கு பிராந்தியமான ஃபுகோகா பகுதியை சேர்ந்தவர் கேன். இவர் 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பிறந்தார். இதே வருடத்தில் ரைட் சகோதரர்கள் முதன் முதலில் தாங்களே வடிவமைத்த விமானத்தில் பறந்தனர். அதேபோல மேரி மேரி க்யூரி நோபல் பரிசை வென்று சாதனை படைத்ததும் இதே வருடம் தான். வரலாற்றில் நிலைபெற்ற சாதனைகளை தற்காலத்தோடு இணைக்கும் பாலமாக இருந்த கேன் தற்போது வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்.

World Oldest Person Dies At 119 In Japan

இவர் தன்னுடைய இளம் வயதில் நூடுல்ஸ் கடை மற்றும் கேக் கடை ஆகியவற்றை கேன் நடத்தி வந்திருக்கிறார். 1922 ஆம் ஆண்டு ஹெடியோ டனாகா என்பவரை மணந்துகொண்டார் கேன். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன. ஐந்தாவதாக ஒரு குழந்தையை இவர் தத்தெடுத்துக் கொண்டார்.

கின்னஸ் சாதனை

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகில் தற்போது வாழ்ந்துவரும் மக்களுள் மிகவும் வயதான நபர் என கின்னஸ் அமைப்பு கேனை அறிவித்தது. அப்போது அவரிடம் உங்களது வாழ்வின் மிகச் சிறந்த தருணம் எது என்று கேட்டபோது "இப்போதுதான்" என்றார் கேன். தினந்தோறும் காலை 6 மணிக்கு எழுந்துவிடும் கேன் மதிய நேரங்களில் கணக்குகளை படிப்பாராம். மேலும் அழகிய எழுத்து முறையான calligraphy வகுப்பிலும் இவர் சிறந்து விளங்கி இருக்கிறார். சாக்லேட்டுகள் என்றால் கேனுக்கு மிகவும் பிடிக்குமாம். விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட கேன் போர்டு கேம்களில் சிறந்து விளங்கியுள்ளார்.

World Oldest Person Dies At 119 In Japan

உலகின் மிக வயதுடைய நபர்

வரலாற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜென்னி லூயிஸ் கால்மென்ட் என்பவர்தான் உலகின் அதிக வயதுடைய நபராக கருதப்பட்டார். 1997ஆம் ஆண்டு அவர் காலமானபோது அவருடைய வயது 122 வருடங்கள் மற்றும் 164 நாட்கள் ஆகும். அதன் பிறகு பூமியில் வாழ்ந்த மிக அதிக வயதுடைய நபர் தற்போது மரணமடைந்துள்ள ஜப்பானைச் சேர்ந்த கேன் டனாகா தான்.

World Oldest Person Dies At 119 In Japan

இவருடைய மறைவிற்கு ஃபுகோகா பகுதியின் ஆளுநர் ஹட்டோரி இரங்கல் தெரிவித்துள்ளார். சமகாலத்தில் வாழ்ந்த உலகின் மிக வயதான பெண்மணி என்று அறியப்பட்ட கேன் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

WORLD OLDEST PERSON, JAPAN, KANE TANAKA, வயதான பெண்மணி, கின்னஸ் சாதனை

மற்ற செய்திகள்