'வெளியானது உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகளின் பட்டியல்!'.. இந்தியாவின் இடம் இதுதான்.. முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பாஸ்போர்ட் பட்டியலில் மூன்றாவது முறையாக ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

'வெளியானது உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகளின் பட்டியல்!'.. இந்தியாவின் இடம் இதுதான்.. முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பதிவுகளை பயன்படுத்தி இந்த ஆண்டு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உலகிலேயே கொண்டிருக்கிறது எந்த நாடு என்பதுதான் ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட இந்தப் பட்டியலில் இப்போது வெளியாகியுள்ளது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு சென்று வர முடிவதையும் மற்றும் ஒரு நாட்டில் சென்று அங்கு இறங்கிய பிறகு விசா பெறுவது என்பன போன்றவற்றின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.

World Most Powerful Passport list out india ranks 85th

எனினும் கடந்த வருடம் கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்ததை அடுத்து விமான போக்குவரத்து அந்த அளவுக்கு வெகுவாக பயன்பாட்டில் இல்லாததால் இது சற்று தொய்வு அடைந்தது. எனினும் இந்த ஆண்டு ஜப்பான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இப்படி மூன்று வருடங்களாக ஜப்பான் முதலிடத்தை பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய மக்கள் தற்போது விசா இல்லாமல் 196 நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதும் அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் குடிமக்கள் 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் உள்ள ஜெர்மனி மற்றும் தென் கொரிய நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு 189  நாடுகளுக்கு விசா இல்லாத பயணங்களை வழங்குகின்றன.

ALSO READ: ‘பேஸ்புக்கில் ஃப்ரண்ட் ரிக்வஸ்ட்டை ஏற்காத முன்னாள் முதலாளி!’ - ஆத்திரமடைந்த வாலிபர் செய்த ‘மிரள வைக்கும்’ காரியம்!

முக்கியமாக பிரிட்டன், பெல்ஜியம் நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 7வது இடத்தையும்,  பிரான்ஸ , அயர்லாந்து ,நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகியவை  6-வது இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன. 9வது இடத்தில் கனடாவும் 10வது இடத்தில் ஹங்கேரி நாடுகளும் உள்ளன.

மற்ற செய்திகள்