‘போதும் ராசா.. நீ தனிமையில பட்ட கஷ்டம் எல்லாம் போதும்!.. உலகின் லோன்லியஸ்ட் ‘யானைக்கு’ அடித்த ‘ஜாக்பாட்!’.. ஆனந்தக் கண்ணீரில் விலங்கு நல ஆர்வலர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானில் நீண்ட நாட்களாகவே தனிமையை அனுபவித்து வரும் காவன் யானைக்கு ஒரு வழியாக விடுதலை கிடைக்கப்போகிறது.

‘போதும் ராசா.. நீ தனிமையில பட்ட கஷ்டம் எல்லாம் போதும்!.. உலகின் லோன்லியஸ்ட் ‘யானைக்கு’ அடித்த ‘ஜாக்பாட்!’.. ஆனந்தக் கண்ணீரில் விலங்கு நல ஆர்வலர்கள்!

ஆம், காவன் யானை கம்ப்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. யானைகளே இல்லாத சூழலில் பாகிஸ்தானுக்கு 1985-ல் காவன் யானையை இலங்கை, அன்பளிப்பாக வழங்கியதுடன், 1990ல் சஹோலி எனும் பெண் யானையையும் வழங்கியது.

இரண்டு யானைகளும் இஸ்லாமாபாத் மிருகக்காட்சிசாலையில் வளர்ந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு சஹோலி யானை உயிரிழந்ததை அடுத்து, காவன் யானை, சிறிய கொட்டகையில் தனிமையில் வாழ்ந்து வந்தது. ஆனால் பாகிஸ்தானில் நிலவும் சீதோஷ்ண நிலையாக்ல், உடல் நலம் மோசமடைந்து உடல் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டு மூர்க்கதனத்துடன் இருந்ததால், காவன் யானையை கட்டி வைத்தனர்.

பின்னர் காவன் யானையை விடுவிக்க வேண்டும் என்கிற குரல் பரவலாக எழுந்தது. இதனால் கம்போடிய யானைகள் சரணாலயத்திற்கு காவன் யானை அனுப்பி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், காவனுக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது.

இதனை அடுத்து காவன் யானை, பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. சில மணிநேரம் விமான இரைச்சல் ஆகியவற்றால் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக சிறப்பு சிகிச்சையும் காவனுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.  நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு காவல் யானை விடுதலை பெற உள்ள இந்த செய்தி, விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்