உலகளவில் '21 ஆயிரத்தை' நெருங்கிய உயிரிழப்பு... கொரோனாவால் அதிகம் 'பாதிக்கப்பட்ட' நாடுகள் இதுதான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். கொரோனா உயிரிழப்பில் தற்போது இத்தாலி முதலிடத்தையும், ஸ்பெயின் 2-வது இடத்தையும், சீனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

உலகளவில் '21 ஆயிரத்தை' நெருங்கிய உயிரிழப்பு... கொரோனாவால் அதிகம் 'பாதிக்கப்பட்ட' நாடுகள் இதுதான்!

உலகம் முழுவதும் 196 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் இதுவரை உலகளவில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 9 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 3 லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்குப்பின் 1 லட்சத்து 13 ஆயிரத்து 799 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதனை கீழே பார்க்கலாம்.

1.இத்தாலி - 7,503

2.ஸ்பெயின் - 3,445

3.சீனா - 3,281

4.ஈரான் - 2,077

5.பிரான்ஸ் - 1,331

6.அமெரிக்கா - 889

7.இங்கிலாந்து - 435

8.நெதர்லாந்து - 356

9.ஜெர்மனி - 206

10.பெல்ஜியம் - 178

11.சுவிட்சர்லாந்து  - 153

12.தென்கொரியா - 126

13.இந்தோனேசியா - 58

14.பிரேசில் - 50

15.ஜப்பான் - 45

16.துருக்கி - 44

17.ஸ்வீடன் - 44

18.போர்ச்சுகல் - 43

19.பிலிப்பைன்ஸ்     - 38

20.டென்மார்க் - 34

21.ஆஸ்திரியா - 30

22.கனடா - 30

23.ஈராக் - 29

24.ஈக்வடார் - 28

25.கிரீஸ் - 22

26.எகிப்து - 21