உலகின் மிகப்பெரிய ஒயிட் டைமண்ட்.. ஏலத்துக்காக போட்டி போட்ட கோடீஸ்வரர்கள்.. எவ்வளவு கோடி..?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக அரிய வகை வெள்ளை நிற வைரம் 21.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வைரம்
பூமிக்கடியில் அதிக அழுத்தத்தின் காரணமாக உருவாகும் வைரங்கள் இயற்கையாகவே அதிக கடினத்தன்மை கொண்டவையாகும். இவை பட்டை தீட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இவை புதைந்துள்ள மண்ணில் இருக்கும் ரசாயனங்களின் அடிப்படையில் இவற்றின் வண்ணமும் மாறுபடும். உதாரணமாக பிங்க், நீல நிற வைரங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறன்றன. இவற்றுள் வெள்ளை நிற வைர கற்கள் அபூர்வமாக கருதப்படுகின்றன. அதன் காரணமாகவே அவற்றின் விலையும் கணிசமாக இருக்கின்றன.
வெள்ளை நிற வைரம்
20 ஆண்டுகளுக்கு முன்னர், தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்பட்டு பாலிஷ் செய்யப்பட்ட அறிய வகை வைர கல் ஜெனிவாவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. 'தி ராக்' எனப் பெயரிடப்பட்ட இந்த வைர கல்லை பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டிஸ் நேற்று ஏலத்திற்கு கொண்டுவந்தது. 228.31 காரட் கொண்ட இந்த அபூர்வ கல், பேரிக்காய் வடிவத்தில் காட்சியளிக்கிறது.
முன்னதாக நியூயார்க், தைபை மற்றும் துபாயில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வைரத்தினை வாங்க உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் போட்டிபோட்டனர். இறுதியாக 21.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 169.6 கோடி ரூபாய்) இந்த அரிய வகை வைரம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த வைரத்தை வட அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் வாங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், அவரது பெயரை வெளியிட ஏல நிறுவனம் மறுத்துவிட்டது.
பதக்கம்
கோல்ஃப் பந்து அளவில் இருக்கும் இந்த வரைத்தின் உரிமையாளர் இதனை விலைமதிப்பில்லா நெக்லஸில் பதித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரத்தினை வாங்கியவருக்கு பிளாட்டினம் மற்றும் வைர பதக்கம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, உலகின் மிக அரிய வகை வைரமாக கருதப்படும் இந்த தி ராக் 30 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 226 கோடி ருபாய்) வரையில் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்