உலகின் மிகப்பெரிய மரகத கல்.. சுரங்கத்துல இந்தியருக்கு அடிச்ச ஜாக்பாட்.. கின்னஸ் அதிகாரிகளே அசந்து போய்ட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மரககத கல் ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்துவருகிறது. காரணம் இதன் அளவு தான். இதற்கு கின்னஸ் நிர்வாகம் சமீபத்தில் அங்கீகாரம் அளித்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய மரகத கல்.. சுரங்கத்துல இந்தியருக்கு அடிச்ச ஜாக்பாட்.. கின்னஸ் அதிகாரிகளே அசந்து போய்ட்டாங்க..!

Also Read | "பிரகதீஸ்வரர் ஆலயம் கட்ட முடியாம போகலாம்... ஆனா கக்கூஸ் கட்டினாலே..." - கமல் பேசியது என்ன?

ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு ஜாம்பியா. இங்கே உள்ள மரகத சுரங்கம் மிகவும் புகழ்பெற்றது. ஜாம்பியாவின் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள காகெம் சுரங்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய மரகத கல் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டது. இந்திய புவியியலாளர் மனாஸ் பானர்ஜி மற்றும் ரிச்சர்ட் கபேட்டா மற்றும் அவர்களது குழுவினரால் இந்த மரகத கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

World largest uncut emerald unearthed Listed On Guinness Website

'உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகதம்' (world's largest uncut emerald) இதுதான் என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்திருக்கிறது. இந்த கல் 7,525 காரட் (1.505 கிலோ) எடை கொண்டது என கின்னஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதுபற்றி கின்னஸ் அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், "இந்த மரகத கல்லிற்கு சிபெம்பேலே என்று பெயரிடப்பட்டது. இது ஜாம்பியாவின் பெம்பா மக்களின் உள்ளூர் பழங்குடி பேச்சுவழக்கில் "காண்டாமிருகம்" என்று பொருள்படும். மரகதத்தின் மேல் உள்ள "கொம்பு" வடிவத்தை குறிப்பதற்காக இந்த கல் "சிபெம்பேல்" என்று பெயரிடப்பட்டது" என்றனர்.

இந்தக் கண்டுபிடிப்புக்கு முன், ஜாம்பியாவில் உள்ள அதே சுரங்கத்தில் மேலும் இரண்டு மரகதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று "இன்போசு" என்றும் மற்றொன்று "இன்கலமு" என பெயரிடப்பட்டது இவை முறையே 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. ஜெம்ஃபீல்டு நிறுவனத்துக்கு சொந்தமான இந்த மரகத சுரங்கம் அந்நாட்டின் தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

World largest uncut emerald unearthed Listed On Guinness Website

2021 ஆம் ஆண்டின் இறுதியில் இயற்கை வைரங்கள் மற்றும் மரகதங்களின் சர்வதேச விற்பனை நிறுவனமான எஷெட், இந்த சிபெம்பேலே மரகதத்தை வாங்கியது. அந்நிறுவன அதிகாரிகள் இந்த கல்லை கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பித்தனர். அங்கீகாரம் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் நிறுவனத்தினர் இருந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரலில் உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகதம் என கின்னஸ் நிர்வாகம் சான்று அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த மரகத கல்லின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Also Read | "தோனி அனுப்பிய மெசேஜ் இதுதான்"..பலநாள் ரகசியத்தை உடைத்த விராட் கோலி.. உருகும் ரசிகர்கள்..!

EMERALD, UNCUT EMERALD, WORLD LARGEST UNCUT EMERALD, GUINNESS WEBSITE

மற்ற செய்திகள்