"பாக்க கல்யாண டிரஸ் மாதிரி இருக்கும், ஆனா உண்மையில".. கின்னஸ் வரைக்கும் போன சம்பவம்!!..
முகப்பு > செய்திகள் > உலகம்நம்மை சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்த செய்தி, அவ்வப்போது இணையத்தில் வைரலாக பரவும். இயல்பாக நடக்கும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடக்கும் போது, அவை இணையவாசிகள் மத்தியில் கவனமும் பெறும்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் என்னும் பகுதியில் பேக்கரி ஒன்றை நடாஷா கோலின் என்ற பெண் நடத்தி வருகிறார். மேலும், இங்கே பல புதிய வடிவிலான கேக்குகளை வடிவமைத்து பலரையும் கவர்ந்துள்ளதுடன் சிறந்த பெயரையும் நடாஷாவின் கடை பெற்றுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக திருமண கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி நடந்துள்ளது. இதன் இறுதி சுற்றில் நடாஷா கோலின் செய்த கேக் வடிவிலான திருமண உடை ஒன்று, அதிக கவனம் பெற்றுள்ளது. சுமார் 131.15 கிலோ எடை கேக் ஒன்றை பெண்களின் திருமண ஆடை போல வடிவமைத்து பட்டையைக் கிளப்பி உள்ளார் நடாஷா.
Images are subject to © copyright to their respective owners.
பார்ப்பதற்கு திருமண ஆடை போன்றே அதே வேளையில் பல அடுக்குகளை கொண்டு, மிகவும் அற்புதமாக இந்த கேக் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அணியக்கூடிய வகையில் உலகின் மிகப் பெரிய கேக்கை தயாரித்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டமும் நடாஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அதில், பெண் ஒருவர் கேக்கால் உருவான திருமண உடை அணிந்து வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்