"இங்க இருக்குற செடி'ய தொட்டா அவ்ளோ தான்.." Gate'ல இருக்கும் Warning.. "பேர கேட்டாலே பீதியா இருக்கே.." பகீர் கிளப்பும் தோட்டம்
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, தோட்டம் என்ற வார்த்தையைக் கேட்டாலே, நம் மனதுக்குள் ஓடுவது, நிறைய நிறத்தில் பூத்து குலுங்கும் பூக்கள், பச்சை பசேல் என இருக்கும் மரங்கள், சுற்றுச் சூழலுக்கு இதமாக இருக்கும் மரத்தின் நிழல் உள்ளிட்டவை தான் ஞாபகம் வரும்.
Also Read | இலங்கை அரசியலில் திருப்பம்.. ராணுவ ஜெட்டில் வெளிநாட்டுக்கு தப்பிய அதிபர் கோத்தபய.. பரபரப்பில் இலங்கை..!
தோட்டம் அல்லது ஒரு பூங்காவிற்குள் நாம் நுழைந்தாலே ஒரு வித புத்துணர்ச்சியும், மனதில் ஓடும் பல கசப்பான விஷயங்கள் மறந்து நிம்மதியாக இருக்கவும் வழி செய்யும்.
ஆனால், இங்கிலாந்திலுள்ள தோட்டம் ஒன்றின் பெயரைக் கேட்டாலே, பலரும் அஞ்சி நடுங்குகிறார்கள். இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கவுண்டியை அடுத்த ஆல்ன்விக் என்னும் பகுதியில் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது.
உலகின் மிக ஆபத்தான பூங்கா என அழைக்கப்படும் இந்த தோட்டத்திற்குள், மனிதரின் உயிரை எடுக்கக் கூடிய சுமார் 100-க்கும் மேற்பட்ட விஷ செடிகள் உள்ளது. அதே போல, இந்த தோட்டத்தின் கேட்டில் கூட, "The Poison Garden" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தின் புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன், இணையத்தில் வெளியாகி, பலரையும் பீதி அடைய செய்திருந்தது.
ஒரு ஆண்டுக்கு சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரை, இந்த தோட்டத்தை பார்த்து செல்கின்றனர். அதே போல, இந்த் தோட்டத்தை பார்க்க வேண்டும் என்றால், தன்னந்தனியாக சென்று பார்க்க முடியாது. அந்த தோட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டியுடன் மட்டும் தான் செல்ல முடியும். அங்குள்ள பல தாவரங்கள் அருகே, இது உங்களை கொல்லக் கூடும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இது போக, அங்குள்ள தாவரங்களை தொடவோ அல்லது நுகர்ந்து பார்க்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது. அப்படி தோட்ட நிர்வாகம் எச்சரித்தாலும், சிலர் அங்குள்ள தாவரங்களை தொட்டு பார்த்து மயங்கி விழுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. உலகின் மிக கொடிய நச்சுத் தாவரம் என கின்னஸ் சாதனை படைத்த ரிசினும் இங்கு தான் உள்ளது.
இது போன்று நிறைய நச்சுத் தாவரங்கள், இந்த தோட்டத்திற்குள் இருந்தாலும், அவற்றில் சில, மருத்துவ நோய்களை குணமாக்கும் ஆற்றல்களை கொண்டும் விளங்குகிறதாம். உதாரணத்திற்கு, Yew Tree எனப்படும் தாவரம், அதனை உண்ணும் ஒருவரை இருபதே நிமிடத்தில் கொல்லக் கூடிய ஆற்றல் உடையது என்றாலும், இதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் டாக்சால் மூலம், மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க மருந்து ஆகவும் பயன்படுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது.
கடந்த 2005 ஆம் ஆண்டு, உருவாக்கப்பட்ட இந்த தோட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல், தாவரவியல் ஆர்வலர்களும் நிறைய பேர் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
Also Read | "யாரும் போன் எடுக்கல, நீங்க தான் 'Help' பண்ணனும்.." பதறிய பெண்.. காரணம் கேட்டு கடுப்பான 'போலீஸ்'
மற்ற செய்திகள்