"பாக்டீரியாவின் இமயமலை இது..நாங்க நெனச்சத விட 5000 மடங்கு பெருசா இருக்கு".. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகப்பெரிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். அதன் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"பாக்டீரியாவின் இமயமலை இது..நாங்க நெனச்சத விட 5000 மடங்கு பெருசா இருக்கு".. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட புகைப்படம்..!

Also Read | பெட்ரோல் வாங்க 5 நாள் கியூ..அடுத்தடுத்து நிகழும் துயரம்.. இலங்கையின் தற்போதைய நிலை என்ன?

2009 ஆம் ஆண்டில், கரீபியனில் உள்ள சதுப்புநிலக் காடுகளின் பகுதிகளில், ஒரு கடல் உயிரியலாளர் தண்ணீரில் சுற்றிக் கொண்டிருக்கும்போது விசித்திரமான ஒன்றைக் கவனித்தார். மெல்லிய முடி போன்ற இழைகள் சுற்றி மிதந்து கொண்டிருப்பதை பார்த்த அவர் அதனை சேகரித்திருக்கிறார். ஆனால் அதுதான் வரலாற்றின் மிக முக்கிய மைல்கல் சாதனையாக அமையப் போகிறது என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

ஆராய்ச்சி

ஆரம்பத்தில், இலைகளில் இருக்கும் மெல்லிய இழைகளாக இவை இருக்கக்கூடும் என நினைத்த ஆலிவர் க்ரோஸ் அதன் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர்," உண்மை கற்பனையை விட மிகவும் விசித்திரமானது. அது ஒரு ஒற்றை செல் பாக்டீரியா தான் என்பதை கண்டுபிடித்திருக்கிறோம். இது நுண்ணுயிர்கள் பற்றிய நமது புரிதலை மாற்றி அமைக்கப்போகிறது" என்றார்.

World biggest bacteria discovered in Caribbean

அதன்பிறகு உயிரியல் ஆராய்ச்சி நிபுணர்கள் பலரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் அது பாக்டீரியா தான் என உறுதிப்படுத்தியுள்ளனர். இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய பாக்டீரியா இதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பாக்டீரியாவின் இமயமலை

வழக்கமான பாக்டீரியாவை விட இது 5000 மடங்கு பெரியதாக இருப்பதாகவும் இதற்கு T. magnifica என பெயரிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள் நிபுணர்கள். வழக்கமாக பாக்டீரியாக்கள் 2 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டவை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த பாக்டீரியா 9000 மைக்ரோ மீட்டர் நீளமுடையது. இதுகுறித்து பேசிய நிபுணர்கள்,"எவரெஸ்ட் சிகரம் போன்ற உயரமான மனிதனை மற்றொரு மனிதனுடன் ஒப்பிடுவது போன்றது" என்றனர்.

World biggest bacteria discovered in Caribbean

இந்த பாக்டீரியாவின் உள்ளே டிஎன்ஏ மற்றும் ரைபோசோம்களை "பெபின்ஸ்" எனப்படும் சிறிய சவ்வு உறுப்புகளுக்குள் இது சேமிப்பதாக கூறும் ஆய்வாளர்கள் இதன் தோற்றம், எவ்வாறு இவ்வளவு பெரிய உடலமைப்பை பெற்றது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.

கரீபியனில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியா, நுண்ணுயிர்கள் பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படையையே மாற்றியமைக்கக்கூடும் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள்.

Also Read | "எல்லோரும் என் சொந்தம் தான்".. 900 குடும்பங்களின் பெயரையும் பத்திரிக்கையில் அச்சடித்த ஊராட்சிமன்ற தலைவர்.. யாருப்பா இவரு?

BACTERIA, WORLD BIGGEST BACTERIA, BIGGEST BACTERIA DISCOVER, CARIBBEAN

மற்ற செய்திகள்