'பீட்சா டெலிவரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?'... 'வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நொடி'... சந்தோசமாக வாழ்க்கையை நடத்தும் ஆப்கான் அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எந்த வேலையும் கேவலம் இல்லை, அதில் அவமானமும் கொள்ளத் தேவையில்லை எனக் கூறியுள்ளார் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரும், தற்போது உணவு டெலிவரி செய்து வருபவருமான சையது சதாத்.

'பீட்சா டெலிவரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?'... 'வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நொடி'... சந்தோசமாக வாழ்க்கையை நடத்தும் ஆப்கான் அமைச்சர்!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரான சையது சதாத், தற்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த செய்தி வெளியான நேரத்திலிருந்து பலரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். ''ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் படித்த சதாத், லண்டன் உள்ளிட்ட நாடுகளில் உயர்பதவிகளில் பணியாற்றியவர்.

Work Is Work: Afghan Ex-Minister On Turning Delivery Boy In Germany

அதன்பின்னர் அவர் 2016 முதல் 2018 வரை ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தார். 50 வயதான சையது சதாத், அரசாங்கத்தில் நிலவிய ஊழலின் காரணமாகத் தனது பதவியைத் தூக்கி எறிந்தார். அமைச்சராக வேலை செய்யும் போது, அரசின் பல திட்டங்கள் தனியாருக்குச் சாதகமானதாக இருந்ததே தவிர, அது மக்களுக்கான திட்டமாக இல்லை.

இதைச் சுட்டிக்காட்டி  மக்களுக்காகத் திட்டங்களைப் போடுங்கள் எனக் கூறினேன். ஆனால் அரசுக்கு இது பிடிக்காமல் என்னை வெளியேற்ற நினைத்தார்கள். எனவே நானே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்'' என சதாத் கூறியுள்ளார். 2020 இல் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தால் ஜெர்மனியில் குடியேறிய அவர், வார நாட்களில் ஆறு மணிநேரமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் முதல் இரவு 10 மணி வரை, சதாத் தனது ஆரஞ்சு கோட் மற்றும் பெரிய சதுர பேக்  அணிந்து பீட்சா டெலிவரி செய்து வருகிறார்.

Work Is Work: Afghan Ex-Minister On Turning Delivery Boy In Germany

இரட்டை ஆப்கானிஸ்தான்-பிரிட்டிஷ் குடிமகனாகப் பிரிட்டனில் ஒரு பணியில் சேர்ந்திருக்கலாம்.  ஆனால் ஜெர்மனியில் தனது துறைக்கு அதிக வாய்ப்புகள் இருந்ததாக சதாத் கூறினார். அதன்பின் வேலைவாய்ப்பு கிடைக்காததால் உணவு விநியோக நிறுவனமான லைஃபெராண்டோவில் பணியாற்றும் அவர், இப்போது ஒரு நாளுக்கு நான்கு மணிநேரம் மொழி வகுப்புகள் எடுத்து வருகிறார்.

"எனக்கு வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையைத் தொடர்வேன் என்று கூறும் சதாத், இதில் கிடைக்கும் சம்பளம் எனக்கு போதுமானதாக உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு மாதமும் 1,200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக உடல் நலனும் மேம்படுவதாக'' கூறியுள்ளார்.

Work Is Work: Afghan Ex-Minister On Turning Delivery Boy In Germany

எந்த வேலையிலும் அவமானம் இல்லை என்பதை நிரூபித்து, அதனைத் தனது வாழ்க்கையிலும் பின்பற்றி வரும் சதாத், இளைஞர்களுக்கு மட்டுமல்ல சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டு தான்.

மற்ற செய்திகள்