Battery Mobile Logo Top
The Legend
Maha Others

"2 வருசமா கோமா'ல இருந்தாங்க.. காரணம் யாருன்னே தெரியாம இருந்தோம்.." 'Clue' கிடைக்காமல் திணறிய போலீஸ்.. கண் திறந்ததும் பெண் சொன்ன 'பெயர்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் ஒருவர், நினைவுக்கு திரும்பியதும் அவர் சொன்ன தகவலும், அதன் பின்னர் நடந்த சம்பவமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"2 வருசமா கோமா'ல இருந்தாங்க.. காரணம் யாருன்னே தெரியாம இருந்தோம்.." 'Clue' கிடைக்காமல் திணறிய போலீஸ்.. கண் திறந்ததும் பெண் சொன்ன 'பெயர்'!!

Also Read | Video : விமானத்தில் வழங்கப்பட்ட 'உணவு'.. "காய்கறிக்கு நடுவுல இருந்தத பாத்துட்டு.." நடுங்கி போன விமான ஊழியர்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், Wanda Palmer என்ற 55 வயது பெண்மணி, தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில், உடல் முழுவதும் ரத்தம் மற்றும் காயங்களுடன் கிடந்ததாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாண்டாவை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.

அப்போது வாண்டா பால்மர் கோமாவுக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்து எந்த விவரங்களும் சேகரிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்டு வந்த போலீசாருக்கும், ஆதாரங்கள் குறைவாக இருந்ததால், வாண்டாவின் நிலைக்கு காரணம் யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிகிறது. வாண்டாவுக்கு இப்படி நடந்த போது அதனை நேரில் பார்த்தவர்களும் யாரும் இல்லை. வாண்டாவுடன் வீட்டில் யாரும் வசிக்கவும் இல்லை. அதே போல, சிசிடிவி உள்ளிட்ட கேமராவின் காட்சிகளோ, செல்போன் கால் செய்த பதிவுகளோ போலீசாருக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால் கோமாவுக்கு தள்ளப்பட்ட வாண்டாவின் நிலைக்கு காரணம் யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், சுமார் இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த வாண்டா, சமீபத்தில் சுயநினைவுக்கு திரும்பிய நிலையில், தன்னை கொலை செய்ய முயன்ற நபர் யார் என்பது பற்றி போலீசாருக்கு தெரிவித்துள்ள தகவல், அவர்களை அதிர செய்துள்ளது.

 women in coma for 2 years wake up and say the reason

தனது உடன் பிறந்த சகோதரனா டேவிட் பால்மர் பெயரை சொல்லி, தன்னை கொலை செய்ய முயன்று, இந்த நிலைக்கு ஆளாக்கியதாக வாண்டா பால்மர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, டேவிட் மற்றும் வாண்டா இடையே விரிசல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, வாண்டாவின் சகோதரரான டேவிட் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் சில தினங்களுக்கு முன் கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் டேவிட் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அவர் உயிரிழந்த சம்பவம், பேரிடியாக அமைந்துள்ளது. 55 வயதாகும் டேவிட் பால்மருக்கு ஏராளமான உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் ஒருவர், சுயநினைவுக்கு திரும்பிய பிறகு, தனது சகோதரர் தான் இதற்கெல்லாம் காரணம் எனக் கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்ட சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்திகள் பலரையும் மிரண்டு போக செய்துள்ளது.

Also Read | ஒரு வாரமா மாலுக்கு வெளிய நின்னுட்டு இருந்த கார்.. "பக்கத்துல போய் கண்ணாடி வழியா பாத்ததுல.." அரண்டு போன காவலாளி

COMA, WOMEN IN COMA

மற்ற செய்திகள்