"என்னய ஏமாத்திட்டு போகலாம்னு பாக்குறியா.?".. வேறொரு பெண்ணுடன் ஹோட்டலுக்கு சென்ற காதலன்.. கண்ணை மறைச்ச கோபம்.. பதறிப்போன போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வேறொரு பெண்ணுடன் ஹோட்டலுக்குச் சென்ற காதலனை, இளம்பெண் கொலை செய்திருப்பது அமெரிக்கா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
காதல்
அமெரிக்காவின் இண்டியானா பகுதியை சேர்ந்தவர் கெய்லின் மோரிஸ். 26 வயதான இவரும் ஆண்ட்ரே ஸ்மித் (26) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஸ்மித் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக சந்தேகத்திருக்கிறார் மோரீஸ். இதனையடுத்து, போன் மூலமாக ஸ்மித்தை டிராக் செய்து வந்திருக்கிறார் மாரிஸ். இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி, ஸ்மித் இண்டியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.
அவரை டிராக் செய்து அதே ஹோட்டலுக்கு காரில் சென்றிருக்கிறார் மோரீஸ். அப்போது, ஸ்மித் மற்றும் பெண் ஒருவர் உணவுகளை ஆர்டர் செய்துகொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த மோரிஸ், ஹோட்டலுக்குள் நுழைந்து, ஸ்மித்திடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஆத்திரமிகுதியால் அங்கிருந்த பாட்டிலை பெண்ணை நோக்கி வீசியுள்ளார் மோரீஸ். அதிர்ஷ்டவசமாக இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் மூவரையும் வெளியே செல்லும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர் ஹோட்டல் பணியாளர்கள்.
கண்ணை மறைத்த கோபம்
ஹோட்டலில் இருந்து வெளியே வந்தும் தொடர்ந்து வாக்குவாதத்தில் மோரிஸ் ஈடுபட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து தனது காரில் ஏறிய மோரிஸ், வேகமாக காரை ஓட்டிச்சென்று ஸ்மித் மீது மோதியுள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே சிமித் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்திலிருந்து மோரிஸ் முயற்சிக்க, அதற்குள் விரைந்துவந்த இண்டியானா மாகாண காவல்துறையினர் மொரீஸை கைதுசெய்திருக்கின்றனர்.
வழக்கு பதிவு
அமெரிக்காவின் மேரியான் கவுண்டியில் உள்ள சிறையில் மோரிஸ் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இண்டியானா மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தனது காதலன் வேறொரு பெண்ணுடன் ஹோட்டலுக்குச் சென்றதால் கோபமடைந்த இளம்பெண், அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | அப்படிப்போடு .. இனி பேருந்துகளில் Gpay மூலம் இ-டிக்கெட்.. தமிழக அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..முழுவிபரம்.!
மற்ற செய்திகள்