"ஒரே ஒரு பாட்டுதான்!"..'ஜார்ஜ் ஃப்ளாய்டு' போராட்டங்களில் 'பட்டையைக்' கிளப்பும் 'கறுப்பின பெண்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்டதை அடுத்து, #blacklivesmatter என்கிற ஹேஷ்டேகின் கீழ், அவருடைய இறப்புக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
அதன் பின்னர் இது தொடர்பாக வெளியான ஒரு வீடியோவில் வெள்ளைக்கார போலீஸாரல், கறுப்பின பெண்ணொருவர் கைது செய்யப்படுவார். அப்போது, “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்? உங்கள் வேலை போகப் போகிறது.?” என்று சொன்னதோடு, மீண்டும் அதே வரிகளை பாடலாகவும் பாடி ஆடினார். இந்த வீடியோ வைரலானது. இதனை அடுத்து அமெரிக்காவின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த ஜோன்னிகா சார்லஸ் என்கிற இந்த கறுப்பின பெண், அந்தச் சம்பவத்துக்கு முன்பு வீடற்றவராக, போதைப் பொருட்களுக்கு அடிமையாக, குடும்பத்தினரால் கைவிடப்பட்டவராக இருந்துள்ளார்.
அதன் பின்னர் அமெரிக்காவில் மிகப் பிரபலமான ஒரு பெண்ணாக மாறியதுடன், அப்போதும் கூட, தான் பிரபலமானது ஏன் என்று அவருக்கு தெரியவரவில்லை. தற்போது பல மாதங்களுக்கு பின்னர், ஜார்ஜ் ஃப்ளாய்டு போராட்டங்கள் அமெரிக்காவை புரட்டிப் போட்டுவரும் இந்த நிலையில், ஜோன்னிகா சார்லஸ் பிரபலமாகியுள்ளார்.
தற்போதும் கூட, ஜோன்னிகா சார்லஸ் பாடிய அந்தப் பாடலுக்கு யாரோ ஒரு டீஜே, பின்னணி இசையெல்லாம் சேர்த்து ட்விட்டரில் பதிவிட, ஜோன்னிகாவின் பாடல் மீண்டும் உலகளவில் ட்ரெண்டானது. ஜார்ஜ் ஃப்ளாய்டு போராட்டங்களில் கூட ஜோன்னிகாவின் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்