'இதுக்கு ஒரு தனி தைரியம் வேணும்'...'ஓடுற ரயிலில் இளம் பெண்ணின் குறும்பு'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்றைய உலகம் செல்ஃபி யுகமாக மாறிவிட்டது. ஒரு தரமான செல்ஃபி எடுக்க பலரும் முயற்சி செய்வது உண்டு. அந்த வகையில் நியூயார்க்கை சேர்ந்த பெண் வேற லெவலுக்குச் சென்று செல்ஃபிகளை க்ளிக்கியுள்ளார்.

'இதுக்கு ஒரு தனி தைரியம் வேணும்'...'ஓடுற ரயிலில் இளம் பெண்ணின் குறும்பு'...வைரலாகும் வீடியோ!

நியூயார்க் நகர ரயிலில் ஜெசிக்கா ஜார்ஜ் என்ற பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த அவர் ‘செல்ஃப் டைமர்' வைத்து செல்ஃபி எடுக்க ஆரம்பித்துள்ளார். இதைப் பார்த்த சக பயணியான பென் யார், ஜெசிக்காவை படம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் ஜெசிக்காவின் செல்ஃபி போஸ்களை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட அது செம வைரலானது. இதுவரை அந்த வீடியோவை 87 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதனிடையே பலரும் ஜெசிக்காவின் தன்னம்பிக்கையை வியந்து பாராட்டியுள்ளனர். பலரும் பயணம் செய்யும் ரயிலில் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் மனதில் படத்தை இந்த பெண் செய்துள்ளார் என பலரும் பாராட்டியுள்ளார்கள். இந்நிலையில் ஜெசிக்காவும் இது குறித்து ட்விட்டரில், “நீங்கள் என் மீது காட்டியுள்ள அன்புக்கு மிக்க நன்றி. இந்த நேர்மறை எண்ணத்தை பரப்புவோம். ஒருவருக்கொருவர் துணை நிற்போம்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

TRAIN, PHOTOSHOOT, CONFIDENCE, NEW YORK, JESSICA GEORGE, VIRAL