கனவுக்கு தடைபோட்ட வீல் சேர்...! ஆனாலும் அசரலயே.. உலக நாடுகளை சுற்றும் இளம்பெண்.. நெகிழ்ச்சி பின்னணி..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சக்கர நாற்காலி தான் இனி வாழ்க்கை என அனைவரும் சொன்ன போதிலும், தன்னம்பிக்கையால் உலகை வட்டமடித்து வருகிறார் இளம்பெண் ஒருவர்.

கனவுக்கு தடைபோட்ட வீல் சேர்...! ஆனாலும் அசரலயே.. உலக நாடுகளை சுற்றும் இளம்பெண்.. நெகிழ்ச்சி பின்னணி..

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | கையில கரண்டி விளையாடுதே.. சாண்ட்விட்ச் செய்யும் குட்டி செஃப்.. ..😍 க்யூட் வீடியோ.!

அமெரிக்காவை சேர்ந்தவர் ரெனி பிரன்ஸ். இவருக்கு 16 வயதாக இருந்தபோது இவருக்கு உடல்நலம் பாதிப்படைந்திருக்கிறது. ஆனாலும், பயணமும் புதுப்புது மனிதர்களை சந்திக்கவும் ஆசைப்பட்டிருக்கிறார் ரெனி. அவருடைய இந்த ஆசைக்கு அச்சாணியாக திகழ்ந்தவர் அவருடைய அம்மா. அமெரிக்காவின் 50 மாகாணங்களுக்கும் தனது மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் அவர். ஆனால் அமெரிக்காவிற்கு வெளியிலும் வானம் இருக்கிறது என கண் சிமிட்டி சொல்லியிருக்கிறார் ரெனி. அப்போது தனது மகள் உலகத்தை வட்டமடிக்க பிறந்தவள் என்பது அவருக்கு தெரிந்துவிட்டது.

Woman who uses a wheelchair travelled 117 countries in the world

Images are subject to © copyright to their respective owners.

ஆனால், மொத்த வாழ்க்கையையும் கலைத்துப்போடும் சம்பவம் ஒன்று ரெனியின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் diastrophic dysplasia எனும் நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லியிருக்கின்றனர். எலும்பு வளர்சிதை சிக்கலால் பாதிப்படைந்த அவர் சக்கர நாற்காலியில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் உலகை சுற்றும் அவரது மாபெரும் கனவுக்கு அந்த வீல் சேர் தடையாக இருக்காது என நம்பிக்கையாகவே தனது அம்மாவிடத்தில் சொல்லியிருக்கிறார் ரெனி.

Woman who uses a wheelchair travelled 117 countries in the world

Images are subject to © copyright to their respective owners.

அவர் சொன்னபடியே தனக்கென ஒரு வேலையை அவர் தேடிக்கண்டு சேர்ந்திருக்கிறார். தன்னுடைய உலகம் சுற்றும் ஆசைக்கு உகந்த அந்த வேலையின் மூலம் சாதிக்கவும் துவங்கியிருக்கிறார். ஒன்று, இரண்டு அல்ல ரெனி இதுவரையில் 117 நாடுகளுக்கு சென்றிருக்கிறார். ஒவ்வொரு புதுப்புது இடங்களுக்கு செல்லும்போதும் புதிதாக பிறப்பது போல உணர்வதாக சொல்லும் இவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மனிதர்கள் தாமாக முன்வந்து உதவுவதாகவும் வாழ்க்கையின் மீதுள்ள பிடிப்பு மேலும் அதிகரித்திருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Woman who uses a wheelchair travelled 117 countries in the world

Images are subject to © copyright to their respective owners.

ஐக்கிய நாடுகள் அவை வகைப்படுத்தியுள்ள நாடுகளில் இன்னும் 70 நாடுகளுக்கு செல்ல இருப்பதாக அறிவித்திருக்கிறார் ரெனி. சமீபத்தில் கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார். தன்னுடைய பயணத்தினால் ஈர்க்கப்பட்ட மக்களுக்கு அவர் சொல்லுவது ஒன்றைத்தான்,"இதைச் செய்வதைப் பற்றி சிந்திக்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் எனது மிகப்பெரிய செய்தி ஒன்று உள்ளது. பலரும் இதைச் செய்ய பயப்படுவார்கள். குறிப்பாக உங்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தால், அதைவிட்டு வெளியே வாருங்கள். இது ஒரு பெரிய உலகம் இங்கே பார்க்க நிறைய இருக்கிறது. இதில் பயப்பட ஏதுமில்லை" என்கிறார்.

Also Read | குறையொன்றுமில்லை.. மனமகிழ்ச்சியுடன் மணமுடித்த மாற்றுத் திறனாளி தம்பதிகள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

TRAVELS, WOMAN, WHEELCHAIR, COUNTRIES

மற்ற செய்திகள்