கடல் நீரில் ஐ போனை தொலைத்த பெண்.. "465 நாட்கள் கழிச்சு கரை ஒதுங்கியதும்" காத்திருந்த ஆச்சரியம்..
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வலம் வரும் செய்திகள் நம்மை ஒருவித வியப்பிற்கும், ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
அப்படி ஒரு சூழலில் தற்போது அதிகம் வைரலாகி வரும் செய்தி ஓன்று, பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.
ஹாம்ப்ஷயர என்னும் பகுதியை சேர்ந்தவர் Clare Atfield. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் தேதி, கடலில் Paddle போர்டிங் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில், அவரது ஐபோன் 8 கடல் நீரில் விழுந்தததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடல் நீரில் போன் காணாமல் போனதால் கிளார் அட்ஃபீல்டு அதனை அப்படியே விட்டுள்ளார். முதலில் கிடைக்கும் என சில முயற்சி எடுத்தாலும், கடல் நீரில் தொலைந்ததால் முயற்சி வீண் என்றும் கிளார் கருதி உள்ளார். அப்படி ஒரு சூழலில், கிளார் அட்ஃபீல்டின் ஐபோன், 465 நாட்களுக்கு பிறகு கிடைத்துள்ளது அவரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அவரது நம்பிக்கைகளுக்கு மாறாக இந்த ஒரு விஷயம் நடந்த நிலையில், இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. 465 நாட்களுக்கு பிறகு கிடைத்த அட்ஃபீல்டின் போன், பயன்பாடு நிலையிலும் இருந்துள்ளது. இதற்கு காரணம், அவர் அந்த போனை நீர் புகாத பை ஒன்றில் வைத்திருந்தது தான்.
அதே போல, போனில் அதிக சேதம் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது. நாயை கொண்டு கடற்கரை அருகே நடந்து சென்றவர், கரையில் போன் அடங்கிய பை கிடந்ததை கண்டுள்ளார். அதற்குள் அட்ஃபீல்டுடைய தாயரின் மருத்துவ அட்டையில் இருந்த விவரத்தை வைத்து போனை கண்டெடுத்தவர் அவரை அழைத்து விவரத்தை தெரிவித்துள்ளார்.
இது பற்றி பேசும் அட்ஃபீல்டு, "இத்தனை நாட்கள் கழித்தும் போன் வேலை செய்வது வினோதமாக உள்ளது. உண்மையில் அத்தனை தூரம் ஒன்றும் போன் பயணிக்கவில்லை" என வியப்பில் தெரிவித்துள்ளார். கடல் நீரில் Paddle போர்டிங் செய்யும் போது தனது போனை கழுத்தை சுற்றி அட்ஃபீல்டு போட்டிருந்த போது தான் அந்த போன் கடல் நீரில் மூழ்கி போயிருந்தது.
சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு போன் கிடைத்தது பற்றி அறிந்து அதனை கண்டெடுத்தவரும் அதிர்ந்து போயுள்ளார். தற்போது கிளாரின் கையில் புதிய போன் இருந்தாலும் பழைய போன் கிடைத்ததால் உற்சாகம் அடைந்துள்ளார்.
மற்ற செய்திகள்