1987-ல் கொலை செய்யப்பட்ட பெண்.. 36 வருசம் கழிச்சு முடிவுக்கு வந்த 'Case'.. "குற்றவாளி பத்தின தகவல் தான் தலைசுத்த வெச்சுடுச்சு"
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளி வந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners
வடக்கு கரோலினாவின் லெக்சிங்டன் பகுதியில் உள்ள ஹார்ட்வேர் ஸ்டோர் ஒன்றில் மேரி மத்திஸ் டேவிஸ் (Mary Mathis Davis) என்ற பெண்மணி பணிபுரிந்துள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டில் இவர் அங்கே பணிபுரிந்து வந்துள்ள நிலையில், இவருக்கு அப்போது 29 வயதாகவும் இருந்துள்ளது.
அப்போது அதே ஆண்டு மே மாதம் அவர் வேலை பார்த்து வந்த கடையில் இருந்து மதிய உணவு இடைவேளையில் வெளியே மேரி சென்றுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார் மேரி. அவரது உடல், அவர் வேலை பார்த்து வந்த ஸ்டோரிலிருந்து சுமார் 20 நிமிடம் நடக்கும் தூரத்தில் கிடந்துள்ளது. போலீசார் மேரியின் உடலை மீட்டு சில ஆதாரங்களையும் திரட்டி உள்ளனர்.
கொலைக்கான காரணம் பற்றியும், கொலை செய்தது யார் என்பது குறித்தும் விசாரித்து வந்த போலீசாருக்கு எந்தவித தகவலும் சிக்காமல் இருந்து வந்துள்ளது. அப்படி இருக்கையில் தான் சுமார் 36 ஆண்டுகள் கழித்து தற்போது மேரியின் கொலைக்கான காரணம் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு கரோலினாவின் லெக்சிங்டன் பகுதியைச் சேர்ந்த ரசல் கிராண்டு வுட் என்ற நபர் தான் மேரியை கொலை செய்துள்ளார். அவர் குற்றம் செய்த போது வயது 32 ஆக இருந்த சூழலில், கடந்த 2013 ஆம் ஆண்டு 58 வது வயதில் அந்த நபரும் உயிரிழந்துள்ளார். ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு சுமார் 26 ஆண்டுகள் யாரிடமும் சிக்காமல் இருந்த ரசல், உயிரிழந்து பத்தாண்டுகள் ஆன சூழலில், குற்றவாளி அவர் தான் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
டிஎன்ஏ மூலம் தற்போது ரசல் தான் கொலையாளி என்பதை போலீசார் உறுதி செய்துள்ள சூழலில் ஆரம்பத்தில் அவர் மீது சந்தேகம் இருந்து வந்ததாகவும் ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரசலை கைது செய்ய முடியவில்லை என்றும் போலீசார் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் 36 ஆண்டுகளாக மேரி கொலை செய்தது யார் என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் இருந்து வந்த சூழலில் தற்போது அது யார் என்பது தெரிய வந்தது அவர்களுக்கு சிறிய நிம்மதியாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்