‘கின்னஸ் ரெக்கார்டு’.. 3 நாள்ல 208 நாட்டுக்கு பயணம்.. எப்படி சாத்தியம்..? ‘சிம்பிளா’ அவர் சொன்ன ஒரு பதில்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளம்பெண் ஒருவர் 3 நாட்களில் ஏழு கண்டங்களையும் சுற்றி வந்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

‘கின்னஸ் ரெக்கார்டு’.. 3 நாள்ல 208 நாட்டுக்கு பயணம்.. எப்படி சாத்தியம்..? ‘சிம்பிளா’ அவர் சொன்ன ஒரு பதில்..!

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த காவ்லா அல்ரொமைதி என்ற பெண், 3 நாட்கள் 14 மணி நேரங்கள் 46 நிமிடங்கள் 48 விநாடிகளில் ஏழு கண்டங்களில் பயணம் மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 87 மணிநேரம் பயணம் செய்துள்ளார். இவரது பயணம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி, ஆஸ்திரேலியாவில் நிறைவடைந்துள்ளது. இந்த பயணத்தின் போது அவர் 208 நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Woman travelled around the world in a record breaking time

இந்தநிலையில் இவரது சாதனை அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இது மிகவும் கடினமாக பயணமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Woman travelled around the world in a record breaking time

இந்த பயணம் குறித்து தெரிவித்த காவ்லா அல்ரொமைதி, ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் பல நாடுகளை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களது நாடும், கலாச்சாரமும் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க நான் விரும்பினேன். அதனால்தான் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தேன். பல இடங்களில் பயணத்தை முடித்து கொள்ளலாமா? என சிந்தித்தேன்’ என தெரிவித்துள்ளார்.

Woman travelled around the world in a record breaking time

மேலும் இந்த சாதனை எப்படி சாத்தியமானது என தெரிவித்த அவர், ‘இதை செய்து முடிப்பதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை தேவை. அடுத்தடுத்து விமானங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டும். சில சமயம் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதற்கு உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம்’ என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்