வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு ‘பாத்ரூமில்’ காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. இத்தனை மாசம் இது எப்படி தெரியாம போச்சு..? அதிர்ந்துபோன மருத்துவர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வயிற்று வலி என பாத்ரூமுக்கு சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு ‘பாத்ரூமில்’ காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. இத்தனை மாசம் இது எப்படி தெரியாம போச்சு..? அதிர்ந்துபோன மருத்துவர்கள்..!

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் (Massachusetts) பகுதியை சேர்ந்தவர் மெலிசா சர்ஜ்காஃப் (Melissa Surgecoff). அங்கு தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 8-ம் தேதி மெலிசா தீவிர வயிற்று வலியால் துடித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவரது கணவர் உடனே ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். இந்த சமயத்தில் கழிவறைக்கு சென்ற மெலிசா ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தன்னுடைய கிட்னியில் இருந்து ஏதோ கல் வெளியேறுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த மெலிசாவுக்கு, குழந்தை பிறந்ததை கண்டு ஒன்றும் புரியாமல் முழித்துள்ளார்.

Woman thought she was passing kidney stone gives birth baby in toilet

இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் USA Today ஊடகத்தில் பகிர்ந்துகொண்ட மெலிசா, ‘நான் கர்ப்பமாக இருந்தேன் என்று எனக்கே தெரியாது. அன்று அதிகாலை எனக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் கழிவறைக்குள் சென்றுவிட்டேன். அப்போது ஏதோ ஒன்று எனது வயிற்றில் இருந்து வெளியேறுவது போல இருந்தது. முதலில் எனது உடலின் உறுப்புதான் வெளியேறுகிறதோ என எண்ணி பயந்துவிட்டேன். அதாவது கிட்னியில் இருந்து கல் வெளியேறுகிறது, அதனால்தான் இவ்வளவு வலி இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தேன். முழுவதும் ரத்தத்துடன் இருந்ததால் முதலில் என்னால் அடையாளம் காண முடியவில்லை.

Woman thought she was passing kidney stone gives birth baby in toilet

சில நொடிகளுக்கு பிறகுதான் அதை தொட்டு பார்த்தேன். அப்போதுதான் அது ஒரு அழகான குழந்தை என்பது எனக்கு தெரியவந்தது. அதன் வயிற்றுப்பகுதியில் மூச்சை இழுத்து வாங்குவது நன்றாகவே தெரிந்தது. உடனே குழந்தையை எடுத்து என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்துக் கொண்டேன். அந்த குழந்தையின் சூடு எனக்கு நன்றாகவே தெரிந்தது. குழந்தை மீது இருந்த ரத்தத்தை ஒரு துணியால் துடைத்தோம். பின்னர் மருத்துவமனைக்கு சென்றோம். தற்போது குழந்தை நன்றாக இருக்கிறது. இது எனக்கே சர்ஃபிரைஸ் தான்’ என மெலிசா தெரிவித்துள்ளார்.

Woman thought she was passing kidney stone gives birth baby in toilet

மெலிசாவுக்கு 9 மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு வயிறும் பெரிதாகதாதல் கர்ப்பம் தரித்திருக்கும் விஷயம் தெரியாமல் போயுள்ளது. அத்துடன், தான் கருவுற்றிருந்ததற்கான பல்வேறு அறிகுறிகள் அவருக்கு வந்துள்ளது. ஆனால், அதனை மெலிசாவால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. வயிற்றில் வேறு ஏதோ பிரச்னை என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

Woman thought she was passing kidney stone gives birth baby in toilet

இன்னொரு முக்கியமான கேள்வி என்ன வென்றால், ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டால் அவருக்கு மாதவிடாய் நின்றுவிடும். அதாவது மாதந்தோறும் வரும் ரத்தப்போக்கு நின்றுவிடும். ஆனால், ஒரு சிலருக்கு கர்ப்பம் தரித்த பிறகும் லேசான ரத்தப்போக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது. இது மிகவும் அரிதான சிலருக்குதான் இப்படி நடக்கும். அதுபோல் தனக்கு சீரற்ற மாதவிடாய் இருந்து வந்துள்ளாதாக மெலிசா நினைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு லியாம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் மெலிசாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்