'மகள்' அனுப்பிய 'மெசேஜ்'... பதறியடித்து போலீசை அழைத்த 'தந்தை'... 'இறுதி'யில் காத்திருந்த செம 'ட்விஸ்ட்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, மொபைல் போன் மூலம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் போது, தவறுதலாக கை பட்டு நாம் அனுப்ப நினைக்கும் தகவலுக்கு பதிலாக வேறு ஏதேனும் செல்ல வாய்ப்புண்டு. அப்படி தவறாக சென்ற செய்தி ஒன்றால் போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மகள்' அனுப்பிய 'மெசேஜ்'... பதறியடித்து போலீசை அழைத்த 'தந்தை'... 'இறுதி'யில் காத்திருந்த செம 'ட்விஸ்ட்'!!!

யூ.எஸ் நாட்டின் விஸ்கான்சின் (Wisconsin) என்னும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் மொபைலிற்கு 'Stabbed' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். அதாவது தான் குத்தப்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்டு பதறிப் போன அந்த பெண்ணின் தந்தை உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் முகவரியை அறிந்து கொண்டு காவல் துறையினர் அந்த அபார்ட்மெண்ட் பகுதிக்கு சென்றுள்ளனர்.  தனது மகள் அவருடைய பாய் ஃபிரெண்ட் வசித்து வருவதாக குறிப்பிட்ட தந்தை, அவரால் எனது மகள் குத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். ஆனால், அங்கு சென்று விசாரித்த போலீசாருக்கு வேறொரு ட்விஸ்ட் காத்திருந்தது.

குத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பெண், எவ்வித காயமும் இன்றி வெளியே நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு தான் தெரிந்தது, தான் 'Swabbed' என அனுப்புவதற்கு பதிலாக, 'Stabbed' என தனது தந்தைக்கு அனுப்பியுள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அருகிலுள்ள கிளினிக் ஒன்றிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதை தான் அப்படி அவர் குறிப்பிட நினைத்துள்ளார். ஆனால், அந்த மெசேஜ் தவறுதலாக சென்றதை அந்த பெண்ணும் கிளினிக்கில் கவனிக்காமல் விட்டு விட்டார்.

அதன் பிறகு தான் தனது வீட்டிற்கு போலீஸ் வந்துள்ளதை தெரிந்து கொண்டு அவர் அங்கு வந்துள்ளார். பிறகு போலீசாருக்கு நடந்த உண்மையான நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்