'உலகையே பீதியில் உறைய வைத்த ஒற்றை பெண்'... 'நினைத்தாலே கால் நடுங்குமே'... புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா மீது நின்று கொண்டு இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'உலகையே பீதியில் உறைய வைத்த ஒற்றை பெண்'... 'நினைத்தாலே கால் நடுங்குமே'... புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்!

உலகின் மிகப் பெரிய கட்டிடம் புர்ஜ் கலிஃபா. இதன் உயரம் சுமார் 838 மீட்டர் (2,722 அடிகள்). இந்த கட்டிடத்தின் உச்சியில் பெண் ஒருவர் நின்று கொண்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. ஆனால் வீடியோ வெளியான நேரத்திலிருந்து அவ்வளவு உயரத்தில், அந்தப் பெண் எவ்வாறு நிற்கிறார், அந்தக் காட்சி செயற்கையாகப் படமாக்கப்பட்டதா - எனப் பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

Woman stands on top of Burj Khalifa in viral Emirates ad.

இந்நிலையில் அந்த வீடியோவிற்கு Emirates நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் Emirates விமானச் சேவை உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். Emirates விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது நிச்சயம் பலரின் கனவாகக் கூட இருக்கலாம். இந்த சூழ்நிலையில் Emirates விமானச் சேவை நிறுவனம் பயணிகளைக் கவர வித்தியாசமான முறையில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட முடிவு செய்தது.

Woman stands on top of Burj Khalifa in viral Emirates ad.

அதன் அடிப்படையில், வான் சாகசப் பயிற்றுவிப்பாளரான அந்த பெண்ணை விமான சிப்பந்தி போல உடை அணிவித்து, அவருக்கு முறையான அனைத்து பயிற்சிகளையும் வழங்கி, அந்த பெண்ணை புர்ஜ் கலிஃபாவின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அந்த பெண்ணின் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அவர், கட்டடத்தின் உச்சியிலிருந்த கம்பத்துடனும், வேறு இரு பகுதிகளுடனும் கயிற்றால் இணைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புக் கயிறுகள் அவருடைய சீருடைக்குள் மறைக்கப்பட்டிருந்தன.

Woman stands on top of Burj Khalifa in viral Emirates ad.

அதோடு அந்த விளம்பர வீடியோவை ஆளில்லா விமானம் (Drone) மூலம் காட்சிப்படுத்தினார்கள். அப்போது  "Fly Better" என்ற வாசகம் கொண்ட அட்டையை அந்த பெண் காட்டிக்கொண்டிருந்தார். இதற்கிடையே சிப்பந்தியும், மற்றவர்களும் கட்டடத்தின் உச்சியை எட்ட1 மணி நேரத்துக்கு மேல் ஆனது என Emirates  நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்