‘அதோட மதிப்பு தெரியாம வித்துட்டேனே’!.. இலவசமாக கிடைத்த சோபாவை விற்ற பெண்.. அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவர் பல லட்சம் மதிப்புள்ள ஷோபாவை தெரியாமல் குறைந்த விலைக்கு விற்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜூல்ஸ் ஷ்ரெய்னர் (Jules Schreiner) என்ற பெண், தனக்கு இலவசமாக ஒருவர் வழங்கிய ஷோபாவை ஆன்லைனில் விற்க நினைத்துள்ளார். இதற்காக அந்த ஷோபாவை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். ஜூல்ஸ் ஷ்ரெய்னர் அந்த போட்டோ பதிவேற்றம் செய்த சில நிமிடங்களில், ஒருவர் அந்த ஷோபாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த ஷோபாவை 500 அமெரிக்கா டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,500) ஜூல்ஸ் ஷ்ரெய்னர் விற்பனை செய்துள்ளார். இதற்கு அடுத்த சில நொடிகளில் அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதே ஷோபாவை விற்பனைக்கு பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ஜூல்ஸ் ஷ்ரெய்னர் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
ஜூல்ஸ் ஷ்ரெய்னரிடம் வாங்கிய ஷோபாவுக்கு அவர் 20,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம்) என விலை நிர்ணயித்து விளம்பரம் செய்துள்ளார். மேலும் அந்த ஷோபா தயாரிக்கப்பட்ட கம்பெனி குறித்து அந்த நபர் பதிவிட்டு இருந்துள்ளார். உடனே அந்த கம்பெனி குறித்து ஜூல்ஸ் ஷ்ரெய்னர் இணையத்தில் தேடி பார்த்தபோது, அது உண்மையாகவே அந்த விலைதான் என்பது தெரியவந்துள்ளது. 15 லட்சம் மதிப்புள்ள ஷோபாவை ரூ.36,500-க்கு விற்ற சோகத்தை ஜூல்ஸ் ஷ்ரெய்னர் தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்