“அசுர வேகத்தில் வந்த ரயில்.. வீல் சேருடன் தண்டவாளத்தில் சிக்கிய முதியவர்!”.. ‘அசகாயமாக’ வந்த பெண் ‘போலீஸ்’ செய்த ‘வைரல்’ காரியம்! வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லோடி என்கிற சிறிய நகரம் அமைந்துள்ளது.
இந்நகர காவல் துறையில் எரிகா என்கிற பெண் போலீஸ் அதிகாரி பணியாற்றி வருகிறார். தினமும் ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள ரயிலடி வழியே காரில் சென்ற பெண் போலீஸ் எரிகா, முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கொண்டிருப்பதைக் கண்டார்.
அப்போது தண்டவாளத்தில் வீல் சேரில் சென்று சிக்கிக் கொண்ட முதியவரால் வரும் பாதையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இந்த சமயத்தில் ரயில் வேகமாக வந்துகொண்டு இருக்கிறது. இதை பார்த்து உடனடியாக காரை நிறுத்தி விட்டு மின்னல் வேகத்தில் முதியவரை நோக்கி ஓடினார் எரிகா. பிறகு வீல் சேரில் இருந்த முதியவரை அப்படியே இழுத்து கீழே தள்ளினார். இந்த முயற்சியில் முதியவர், எரிகா இருவருமே கீழே விழுந்து காயம் அடைந்தாலும், அந்த முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டது
எரிகா கொஞ்சம் தாமதித்திருந்தாலும் முதியவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தக்க சமயத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு அவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் எரிகா. அவரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். லோடி நகர காவல்துறையோ, ‘எரிகா எங்கள் ஹீரோ’ என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
மற்ற செய்திகள்