8 வருசத்துக்கு முன்னாடி தொலைஞ்ச செல்ல நாய்.. கடைசியா வந்த போன் கால்.. கண்ணீர் விட்ட பெண்.. மனம் உருகும் சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்சுமார் 8 ஆண்டுகளுக்கு முன், வளர்த்தி வந்த நாய் தொலைந்து போன நிலையில், அதன் உரிமையாளரான பெண்ணுக்கு தற்போது கிடைத்துள்ள தகவல், இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Also Read | "11 வருசத்துக்கு முன்னாடியே.." சூர்யகுமார் பத்தி ரோஹித் போட்ட ட்வீட்.. "இப்போ செம வைரல் ஆயிருக்கு.."
கடந்த 2013 ஆம் ஆண்டு, ஃப்ளோரிடாவில் வசித்து வந்த பெட்ஸி டிஹான் என்ற பெண் ஒருவர், பிட் புல் நாய் ஒன்றை வாங்கி வளர்த்தி வந்துள்ளார்.
அதற்கு ஹார்லி என்றும் பெட்ஸி பெயரிட்டு வளர்த்தி வந்த நிலையில், சுமார் ஒரு வருடம் ஆனதும் அந்த நாய் காணாமல் போயுள்ளது. மிகவும் செல்லமாக வளர்த்து வந்த நாய், திடீரென காணாமல் போனதால் கலங்கி போயுள்ளார் பெட்ஸி.
காணாமல் போன நாய்
இதனைத் தொடர்ந்து, பல இடங்களில் நாயைத் தேடி அலைந்த பெட்ஸி, அத்துடன் மட்டும் நிறுத்தி விடாமல், போஸ்டர் அடித்து நாய் காணாமல் போனதை விளம்பரமும் செய்துள்ளார். ஆனால், தனது நாயான ஹார்லி குறித்து எந்தவித தகவலும் பெட்ஸிக்கு கிடைக்கவில்லை. மேலும், நாய் காணாமல் போன ஒரு வருடத்தில், அவர்கள் ஃப்ளோரிடாவில் இருந்து மிஸ்ஸோரி பகுதிக்கும் பெட்ஸியின் குடும்பத்தினர் குடி பெயர்ந்துள்ளனர்.
இதன் பின்னர், வேறு நாயையும் பெட்ஸி வாங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், Lee County Domestic Animal Services-ல் இருந்து பெட்ஸிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது, பிட் புல் நாய் ஒன்றை கண்டதாக ஒரு குடும்பத்தினர் தங்களுக்கு தெரிவித்ததாக பெட்ஸியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாயின் தோலில் இருந்த மைக்ரோ சிப் மூலம், நாயின் உரிமையாளரான பெட்ஸியின் விவரங்களை அவர்கள் கண்டறிந்தது பற்றியும் தெரிவித்துள்ளனர்.
உடைந்து அழுத பெண்
8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நாய், தற்போது கிடைத்துள்ளதை அறிந்து உற்சாகம் அடைந்த பெட்ஸி, சுமார் 1900 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து தனது நாயை மீட்க போயுள்ளார். இது தொடர்பாக பேசும் பெட்ஸி, "தன்னுடைய ஹார்லி மிகவும் மோசமாக இருந்தது. அதன் கால் நகங்கள் கூட வளர்ந்தும் இருந்துள்ளது. அது நடந்து செல்லும் போது கூட, எலும்பும் தோலுமாக இருந்தது. இது ஒரு அதிசயம் போல உள்ளது. அவன் கண்டுபிடிக்கப்பட்டதை என்னால் நம்பவே முடியவில்லை" என பெட்ஸி தெரிவித்துள்ளார்.
அதே போல, 8 ஆண்டுகளுக்கு பின் தனது நாயை கண்டதும், பெட்ஸி ஆனந்த கண்ணீர் வடித்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்