"நீங்க செலக்ட் ஆகல.." நிறுவனம் அனுப்பிய மெயில்.. இளம்பெண் போட்ட 'Reply'-அ பாத்துட்டு.. உடனே Interview வாங்கன்னு அழைத்த 'கம்பெனி'
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில், பலரும் படித்து முடித்து விட்டு, வேலை வேண்டும் என அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், தாங்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைப்பதற்காக ஏராளமான நிறுவனங்கள் ஏறி, இறங்குவதும், பல நிறுவனங்களுக்கு மெயில் அனுப்புவதும் என நிறைய முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
இதில், பலருக்கும் அதிர்ஷ்டம் உடனடியாக கதவைத் தட்டி வேலையும் கிடைத்து விடுகிறது. அதே வேளையில், எக்கச்சக்க நிறுவனங்களுக்கு தனது Resume-ஐ அனுப்பி வந்தாலும், ஏதாவது ஒரு காரணங்களுக்காக வேலை கிடைக்காமலே போய் விடும்.
நிச்சயம் எப்படியாவது ஒரு நாள் முயன்று வேலையில் ஏறி விட வேண்டும் என்பதற்காக, இன்னும் அதிக முயற்சி மேற்கொண்டு உழைப்பார்கள். அப்படி ஒரு இளம்பெண், நிறைய இடங்களில் வேலைக்கு முயற்சித்து, ஒரு நிறுவனம் அவரை தேர்வு செய்யாமல் போன பிறகும், ஒரே ஒரு காரணத்திற்காக மீண்டும் அவரை Interview-விற்கு அழைத்த சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
டிக் டாக் செயலியில் இளம்பெண் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவின் படி, ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. படித்து முடித்து விட்டு, ஏதாவது நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்ற நோக்கில், இளம் பெண் ஒருவர் பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து மெயில்களை அனுப்பி வந்துள்ளார். அப்படி இருக்கையில், ஒரு நிறுவனத்தில் இருந்து Reply மெயில் ஒன்று வந்துள்ளது.
அந்த பெண்ணை அவர்கள் தேர்வு செய்யவில்லை என அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தில் எப்படியாவது வேலைக்கு சேர வேண்டும் என அந்த பெண்ணும் பெரிய அளவில் விரும்பி உள்ளார். அதே வேளையில், அவர்கள் தேர்வு செய்யவில்லை என்பதால், நிறுவனத்தின் மெயிலுக்கு மீம்ஸ் ஒன்றின் மூலம் பதில் தெரிவித்துள்ளார் அந்த இளம்பெண்.
"ஏன் இப்படி செய்தீர்கள்?" என்பதை குறிக்கும் வகையில் (Y tho) என குறிப்பிடப்பட்ட மீம் ஒன்றை அவர் அனுப்பி உள்ளார். இதனை அந்நிறுவனத்தினர் கவனித்துள்ள நிலையில், உடனடியாக அடுத்த மெயிலும் இளம்பெண்ணுக்கு வந்துள்ளது. அதாவது, அந்த நிறுவனம் தன்னை நேர்காணல் செய்ய விரும்பி, மெயில் அனுப்பியதாக அந்த பெண் டிக் டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நேர்காணலில் இருந்து நிராகரிக்கப்பட்ட பெண், அந்த நிறுவனத்திற்கு மீண்டும் மீம் ஒன்றை அனுப்பி உள்ளதால், மனதை மாற்றிய அந்த நிறுவனத்தினர், பெண்ணை நேர்காணலுக்கு அழைத்துள்ளது. இதனை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வீடியோவைக் காணும் பலரும் மீம் மூலம், இளம்பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து, ஆச்சரியத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்