‘வீட்டை எல்லாம் காலி பண்ண முடியாது’!.. 10 ஆண்டுகள் பிடிவாதமாக இருந்த பெண்.. கடைசியில் அதிகாரிகள் எடுத்த முடிவு..!
முகப்பு > செய்திகள் > உலகம்நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக பெண் ஒருவர் வீட்டை காலி செய்ய மறுத்ததால், வீட்டை சுற்றி சாலை அமைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் நெடுஞ்சாலை அமைக்க அந்நாட்டு அரசு, தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி சாலை அமைய உள்ள இடத்தில் இருக்கும் வீடுகளின் உரிமையாளர்களிடம் பேசி காலி செய்துள்ளனர். அவர்களது வீட்டுக்கு மாற்றாக பணமாகவோ அல்லது வேறொரு இடத்தில் வீடாகவோ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
ஆனால் குவாங்சோ (Guangzhou) என்ற பகுதியில் அமைந்திருக்கும் 40 சதுர மீட்டர் அளவு கொண்ட சிறிய வீட்டை மட்டும் அதிகாரிகளால் வாங்க முடியவில்லை. அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் வீட்டை காலி செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்துள்ளார். இந்த இடத்துக்கு அதிக விலை கொடுப்பதாக கூறியுள்ளனர். அதுமல்லாமல் இரண்டு பிளாட்டுகள் கூட ஒதுக்கி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் எதற்கு அப்பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை.
சுமார் 10 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்துள்ளது. எப்படியாவது அப்பெண்ணிடம் வீட்டை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் சாலை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பணி துவங்கியும் அப்பெண் வீட்டை விட்டுக்கொடுக்கவில்லை. இறுதிவரை அவரது முடிவில் உறுதியாக இருந்ததால், அப்பெண்ணின் வீட்டை சுற்றி செல்லும்படி பாலம் அமைத்து சாலை போட்டுள்ளனர்.
சமீபத்தில் இந்த சாலையில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த வீட்டுக்கு ‘நெயில் ஹவுஸ்’ (Nail House) என பெயர் வைத்துள்ளனர். இரு சாலைகளுக்கு நடுவே அமைந்துள்ள வீட்டை பார்ப்பதற்காகவே அந்த வழியாக மக்கள் பலர் வருகின்றனர்.
மற்ற செய்திகள்