"ஆத்தாடி.." 13 வருஷமா நடந்துருக்கு.. 66 வயது பெண் போட்ட நாடகம்.. இப்போ தான் விஷயமே வெளிச்சத்துக்கு வந்துச்சு..
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தைச் சேர்ந்த 66 வயதான பெண்மணி ஒருவர், கடந்த 13 ஆண்டுகளாக செய்து வந்த விஷயமும், அதன் பின்னால் உள்ள சதி வேலைகளும் பலரையும் அதிர்ந்து போக செய்துள்ளது.
பொதுவாக, அனைத்து நாடுகளிலுமே அங்குள்ள மக்களுக்கோ அல்லது தொழிலார்களுக்கோ ஏதாவது தேவைகள் வரும் போது, அதனை பூர்த்தி செய்வதற்காக, வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல அம்சங்களை பின்பற்றி வருவதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 66 வயதான ஃபிரான்சஸ் நோபல் என்ற பெண், கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், தனக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், இதற்காக பலனளிக்கும் ஊதியம் மற்றும் 24 மணி நேரமும் தீவிர வீட்டு பராமரிப்பு தேவைப்படுவதாகவும் கூறி, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கவுண்டி கவுன்சிலில் தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகளாக பெற்று வந்த உதவி
ஃபிரான்சஸ் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கவுன்சிலின் உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நேரடி கட்டண பராமரிப்பு தொகுப்பு முறையை செயல்படுத்தி, நிதி உதவிகளை வழங்கி வந்துள்ளனர். இதன் காரணமாக, கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையையும் பெற்று வந்துள்ளார் ஃபிரான்சஸ் நோபல்.
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர்
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், ஃபிரான்சஸ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. அதாவது, உடல்நிலை சரி இல்லை என கூறிய நோபல், அதிகாலை வேளையில் தனது நாயை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதை அக்கம் பக்கத்தினர் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, அவரை தீவிரமாக கண்காணித்ததில், ஹோம் டெலிவரி செய்யும் பொருட்களையும் எந்தவித பிரச்சனையும் இன்றி, அவர் வாங்கிச் சென்றது தெரிய வந்துள்ளது.
அதிர வைத்த பெண்மணி
இது தொடர்பாக, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கவுண்டி கவுன்சிலில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக நோபலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. கடந்த 13 ஆண்டுகளில், சுமார் 6 கோடி ரூபாய் வரை ஊதியம் பெற்று அனைவரையும் ஏமாற்றி உள்ளார். அது மட்டுமில்லாமல், தனக்கு கிடைத்த பணத்தையும், தனது மகள் மற்றும் மருமகனின் கனடா மற்றும் அமெரிக்கா செல்வதற்கான ஆடம்பர விடுமுறைக்கு செலவு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், நோபலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இங்கிலாந்தில் நடந்த மிகப் பெரிய மோசடி வழக்குகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்