'ஆத்தாடி'... இது 'டாய்லெட்' இல்லையா?...'இளம் பெண்ணின் செயலால்'...அதிர்ந்து போன பயணிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது,அவசர கால கதவை இளம் பெண் ஒருவர் திறந்ததால்,பயணிகளிடையே பீதி ஏற்பட்டது.
இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு,பிகே 702 என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி சேவையினை வழங்கி வருகிறது.இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை இந்த விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது.இந்த விமானத்தில் 40 பயணிகள் உட்பட விமான ஊழியர்கள் சிலரும் இருந்தனர்.
இதனிடையே புறப்பட விமானம் ஓடுபாதையில் ஓட தயாராகி கொண்டிருந்தது. அப்போது திடீரென எழுந்த பெண் பயணி ஒருவர்,கழிவறை என நினைத்து, அவசரகால வழியை திறந்தார்.இதனை சற்றும் எதிர்பாராத மற்ற பயணிகள் அதிர்ந்து பீதியில் உறைந்து போனார்கள்.இந்நிலையில் அவர் அவசர கால கதவை திறக்க முற்பட்டதால் பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது.
இதையடுத்து நிலைமையை உணர்ந்த விமானி விமானத்தை உடனடியாக நிறுத்தினார்.விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு, ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள்.இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே விமானம் 7 மணி நேர தாமதத்திற்கு பின்பு புறப்பட்டு சென்றது.விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணைக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக் உத்தரவிட்டுள்ளார்.