"அடேங்கப்பா, இப்படியும் ஒரு கலெக்ஷனா?".. 20 வருசத்துல 450 ஜோடி.. காலணிகள் சேமித்து வைத்த பெண் சொல்லும் வினோத காரணம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நம்மில் பலருக்கும் ஸ்டாம்ப், ட்ரெயின் அல்லது பஸ் டிக்கெட், நாணயங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை சேமித்து வைக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.

"அடேங்கப்பா, இப்படியும் ஒரு கலெக்ஷனா?".. 20 வருசத்துல 450 ஜோடி.. காலணிகள் சேமித்து வைத்த பெண் சொல்லும் வினோத காரணம்!!

இது போன்ற சிறிய பொருட்கள் தொடங்கி, கார், பைக் உள்ளிட்ட பொருட்கள் மீதுள்ள ஆர்வம் காரணமாக, அவற்றையும் வகை வகையாக சேமித்து வைக்கும் நபர்களும் ஏராளமாக உள்ளார்கள்.

இப்படி பலருக்கும் பலவிதமான பழக்கங்கள் இருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட காலணிகளை சேர்த்து வைத்துள்ள விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ரோஷெல் என்ற பெண் தன்னுடைய மூட்டு வலிக்காக பிரபல காலனி ப்ராண்டான Crocs-ன் ஷூ ஒன்றை சுமார் 20 வருடங்களுக்கு முன் வாங்கி இருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல, Crocs ப்ராண்ட் காலணிகள் மற்றும் ஷூக்கள் தனக்கு மிகவும் வசதியாக இருந்த காரணத்தினால் தொடர்ந்து அதே பிராண்டினை பயன்படுத்தி வந்துள்ளார் ரோஷெல்.

woman obsessed with crocs collection of 450 pairs in 20 years

கடந்த 2000 ஆண்டு முதல், Crocs ஷூக்கள் மற்றும் காலணிகளை வாங்கி வரும் ரோஷெல், ஒரே ரக காலணிகளை அளந்து அணிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி கடந்த 22 ஆண்டுகளில் மட்டும் 450 ஜோடி கிராக்ஸ் செருப்புகளை வாங்கி ஒரு கலெக்சன் போல வீட்டில் சேமித்து வைத்துள்ளார் ரோஷெல்.

இது குறித்து பேசும் ரோஷெல், கிராக்ஸ் செருப்புகள் மற்றும் ஷுக்களை அணிவது ரொம்பவே பிடித்திருக்கிறது என்றும் இந்த காலணிகளை சுலபமாக பராமரித்துக் கொள்ள முடியும் என்பது மட்டுமில்லாமல் தனது பர்சனாலிட்டிக்கும் பொருந்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஷூ அல்லது காலணிகளை அணியும் போது சந்தோஷமாக இருப்பதாகவும் தன்னுடைய தனித்தன்மையை அதன் காரணமாக எதிரொலிக்க முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார் ரோஷெல்.

woman obsessed with crocs collection of 450 pairs in 20 years

ரோஷெல் மட்டுமில்லாமல், அவருடைய பெற்றோரும் க்ராக்ஸ் காலணிகள் மற்றும் ஷூக்கள் அணிவதை வழக்கமாகக் கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மகளுக்கு இணையாக சுமார் 300 ஜோடி க்ராக்ஸ் காலணிகளை கலெக்ஷன்கள் போல வைத்துள்ளார் ரோஷெலின் தாயார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 450 காலணிகளை இளம்பெண் ஒருவர் சேமித்து வைத்துள்ளது தொடர்பான செய்தி, அதிகம் வைரல் ஆகி வருவதுடன் பலரை வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது.

CROCS, CHAPPALS

மற்ற செய்திகள்