COBRA M Logo Top

அம்மாக்கு அனுப்புறதுக்கு பதிலா.. முதல் மாச சம்பளத்த வேற நபருக்கு அனுப்பிய பெண்.. "கடைசி'ல அந்த நபர் சொன்னத கேட்டு கண்ணீரே வந்துடுச்சு"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக ஒரு நபருக்கு வேலைக்கு கிடைத்த பிறகு கிடைக்கும் முதல் மாத சம்பளம் என்பது மிக மிக ஸ்பெஷல் ஆகும்.

அம்மாக்கு அனுப்புறதுக்கு பதிலா.. முதல் மாச சம்பளத்த வேற நபருக்கு அனுப்பிய பெண்.. "கடைசி'ல அந்த நபர் சொன்னத கேட்டு கண்ணீரே வந்துடுச்சு"

அந்த சம்பளத்தின் மூலம் தனது பெற்றோர்கள் அல்லது மிகவும் நெருக்கமான நபர்களுக்கு ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால், பெண் ஒருவர் தனக்கு முதல் மாத சம்பளம் கிடைத்ததும் அவர் தவறுதலாக செய்த விஷயத்தால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில், ஆன்லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யும் வழக்கம் என்பது ஏராளமான மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், செய்துள்ள பண பரிமாற்றம் தொடர்பான விஷயம் தான், தற்போது சற்று பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

மலேசியாவை சேர்ந்தவர் Fahada Bistari. இவர் சமீபத்தில் டிக் டாக் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, சமீபத்தில் அவர் தனது முதல் மாத சம்பளத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தனது தாயின் வங்கி கணக்கிற்கும் ஆன்லைன் மூலம் அவர் மாற்றி அனுப்ப முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

woman mistakenly send money to stranger he said its a donation

அந்த சமயத்தில் தான் கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்தது. அதாவது, தாயின் வங்கி கணக்கில் மாற்றி அனுப்புவதற்கு பதிலாக, முன்பின் தெரியாத ஒரு நபரின் வங்கி கணக்கில் Fahada Bistari பணத்தை அனுப்பி உள்ளார். முதல் மாத சம்பளம் கிடைத்த உற்சாகத்தில் இருந்த Fahada, சரியாக கவனிக்காமல் இந்த தவறினை செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இதன் பின்னர், சம்மந்தப்பட்ட நபரின் எண்ணும் Fahada-வுக்கு கிடைத்துள்ள நிலையில், அதற்கு அழைத்து பணம் தவறுதலாக வந்த விஷயத்தை விவரித்து பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், அந்த நபரோ ஒரு நன்கொடையாக நினைத்துக் கொண்டு விட்டு விடவும் கூறி உள்ளார். இதனால் மனம் நொந்து போன Fahada, இது தொடர்பான வீடியோ ஒன்றையும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

woman mistakenly send money to stranger he said its a donation

தனக்கு கிடைத்த சம்பளம் சற்று குறைவாக இருந்ததாகவும் இதனால் அதனை தாய்க்கு கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் கண்ணீருடன் கூறி உள்ளார். மேலும், இந்த சம்பவத்தால் தான் ஒரு சிறந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும் Fahada குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில், அடுத்த சில தினங்களுக்கு பிறகு, அந்த நபர் பெண்ணின் நிலையை எண்ணி, பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், வங்கி கணக்கில் பணம் அனுப்பும் போது கவனத்துடன் அனுப்ப வேண்டும் என்றும் Fahada குறிப்பிட்டுள்ளார்.

MONEY, SALARY, WOMAN

மற்ற செய்திகள்