‘இந்த வயதில்’... ‘அசரடிக்க வைக்கும் சாதனைகள்’... ‘வியப்பூட்டும் எனர்ஜி லெவல்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

73 வயதில் தளர்ந்துவிடாமல், பிகினி ஃபிட்னெஸ் போட்டிகளில் கலந்துகொண்டு, இளம்பெண்களுக்கு சவால்விடும் வகையில், வெற்றி வாகை சூடி வருகிறார், முதியப் பெண்மணி ஒருவர்.

‘இந்த வயதில்’... ‘அசரடிக்க வைக்கும் சாதனைகள்’... ‘வியப்பூட்டும் எனர்ஜி லெவல்’!

அமெரிக்காவின் நெவாடா மாகாணம், ரெனோ நகரத்தைச் சேர்ந்தவர் மரியா கிறிஸ்டினா (73). நெவாடா மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள கல்லூரிகளில் 20 வருடத்திற்கும் மேலாக, தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இளமையில் மிகவும் துடிப்பாக, சுறுசுறுப்பாக இருந்த மரியா கிறிஸ்டினா, 50 வயதுக்கு மேல், வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்களால், மன அழுத்தத்தை சந்தித்துள்ளார். இதனால், ஓய்வுக்குப் பிறகு, உடல் ஆரோக்கியத்தை கவனிக்க மரியா முடிவு எடுத்துள்ளார்.

இதையடுத்து, தனது 69-வது வயதில், பிட்னெஸ் பயிற்சியார் ஒருவரின் உதவியுடன், தினமும் காலை 45 நிமிடம் கார்டியோ (cardio) மற்றும் வாரத்திற்கு 3 முறை என உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இரண்டே ஆண்டுகளில், தனது உடலை கட்டுகோப்பாக மாற்றிய அவர், முதன்முறையாக கடந்த 2017-ம் ஆண்டு, பிட்னெஸ் மாடலிங் போட்டியில் பங்குபெற்று பட்டத்தை தட்டிச் சென்றார். இந்தப் போட்டியில், அவர் பிகினி, சிறந்த உடலமைப்பு மற்றும் நீச்சல் உடை உள்ளிட்ட 6 பிரிவுகளில் பட்டம் பெற்றார்.

அதுவும் அந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்கள், இவரின் வயதில் பாதிதான். இதனால் ஊக்கம் பெற்ற மரியா கிறிஸ்டினா, தொடர்ந்து பிட்னெஸ், மாடலிங் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். 73 வயதில் பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோப்பையை வென்று வருகிறார் மரியா. போட்டிகளில் வெற்றிபெற எப்போதும் ஜிம்மில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறும் மரியா, ஊக்கத்துடன் செயல்பட இந்த ஃபிட்னெஸ்  போட்டிகள் உதவுவதாக தெரிவித்துள்ளார். 

MARIACRISTINA, AMERICA