ஃபுட் & மளிகை டெலிவரி பண்ணியே வாரத்துக்கு ரூ.90 ஆயிரம் வரை சம்பாத்யம்... உலகளவில் வைரலாகும் ஸ்மார்ட் பெண்.!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து உண்ணும் பழக்கம் என்பது மக்கள் பலரது மத்தியில் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
நேராக உணவகம் சென்று உணவருந்தி வருவதை விட, வீட்டில் அல்லது அலுவலத்தில் இருந்தபடியே நகர பகுதிகளில் உணவினை பெரும்பாலானோர் ஆர்டர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இளம் பெண் ஒருவர் உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை டெலிவரி செய்து வாரத்திற்கு சுமார் 90,000 ரூபாய் வரை சம்பாதித்து வரும் விஷயம், பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது. கடின உழைப்பையும், ஸ்மார்ட் வொர்க்கையும் சரியாக கையாண்டால் மிகவும் பெரிய இடத்திற்கு வரலாம் என பலரும் கூறுவார்கள். அதனை தான் இந்த இளம்பெண் செய்து வருகிறார்.
லண்டனை சேர்ந்தவர் அட்லாண்டா மார்ட்டின் (Atlanta Martin). விமான நிர்வாகத்தின் முழு நேர பணியிலிருந்து விலகி விட்டு தற்போது டெலிவரி ஊழியராக தனது காதலருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். பொதுவாக உணவினை நாம் டெலிவரி செய்யும் வேலை பார்க்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மால் சம்பாதிக்க முடியும்.
ஆனால் அட்லாண்டா மார்ட்டின் மற்றும் அவரது காதலர் பெஞ்சமின் இணைந்து ஒரு வாரத்திற்கு சுமார் 1000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 90 ஆயிரம் ரூபாய்) வரை சம்பாதித்து வருகின்றனர்.
Just Eat, Uber Eats உள்ளிட்ட பல டெலிவரி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் அட்லாண்டா, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களை விடவும் அதிகம் சம்பாதித்து வருகிறார். அது மட்டுமில்லாமல், அட்லாண்டாவும் அவரது காதலரும் சேர்ந்து எத்தனை ஆர்டர்கள் டெலிவரி செய்கிறார்கள் என போட்டி போட்டு வேலை பார்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு முறை 24 மணி நேரமும் தொடர்ந்து இவர்கள் டெலிவரி செய்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது பற்றி பேசும் அட்லாண்டா, "முதலில் இந்த வேலை ஆரம்பிக்கும் போது 24 மணி நேரமும் டெலிவரி இயங்கக்கூடிய இடமாக லண்டன் மட்டும் தான் இருந்தது. ஆனால் டெலிவரி வேலைக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து பிரைட்டன் பகுதியிலும் 24 மணி நேர சேவை தற்போது இயங்கி வருகிறது. என்னுடன் எனது காதலன் பெஞ்சமினும் இருப்பதால், ஒருவரை ஒருவர் நாங்கள் ஊக்கப்படுத்தி மாறி மாறி வாகனம் ஓட்டி வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
காதலனுடன் இணைந்து இப்படி மணிக்கணக்கில் டெலிவரி செய்து பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வரும் இளம் பெண்ணை நெட்டிசன்கள் பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்