"அவரு கியர் மாத்துற ஸ்டைல் இருக்கே".. கார் டிரைவர் மீது பணக்கார பெண்ணுக்கு மலர்ந்த காதல்.. Viral ஆகும் Couple

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பணக்கார வீட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டில் கார் ஓட்டுநராக இருந்த நபர் மீது காதல் வயப்பட்டதுடன் அதற்கு அவர் சொன்ன காரணம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

"அவரு கியர் மாத்துற ஸ்டைல் இருக்கே".. கார் டிரைவர் மீது பணக்கார பெண்ணுக்கு மலர்ந்த காதல்.. Viral ஆகும் Couple

Also Read | சென்னை : துக்க நிகழ்வுக்காக துபாயில் இருந்து வந்த குடும்பம்.. ஃபிரிட்ஜ் வெடித்து பலியான சோகம்.!

சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர், தன்னை விட 32 வயது மூத்தவரான ஆசிரியர் ஒருவர் மீது காதலில் விழுந்திருந்தது இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது.

அந்த வகையில், தற்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பணக்கார இளம் பெண் ஒருவர் தனது வீட்டில் கார் ஓட்டுநராக இருந்த நபரை திருமணம் செய்துள்ள விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக இணையத்தில் வலம் வரும் தகவலின் படி பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த கார் ஓட்டுநர் மீது காதல் வயப்பட்டதாக தெரிகிறது.

woman love and married her car driver impress by gear changing style

முன்னதாக அந்த ஓட்டுநர் மூலம் கார் ஓட்டவும் பயின்றுள்ளார் அந்த பெண். அப்போது, கார் ஓட்டும் சமயத்தில் அந்த நபர் கியர் மாற்றும் ஸ்டைலை கண்டு தான் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கியர் மாற்றும் சமயத்தில் அவர் கையை மாற்றும் விதத்தையும் அந்த பெண் அதிகம் விரும்பி உள்ளார். அது மட்டுமில்லாமல், கியர்கள் மாற்றும் சமயத்தில் அவரது கையை பிடிக்கவும் அவர் ஆசைப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது காதலை அந்த ஓட்டுனரிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் ஒரு பக்கம் பயமும் அதிர்ச்சியும் ஒரு சேர அந்த நபருக்கு உருவாகி உள்ளது. இதற்கு காரணம், தனது வேலையும் இதனால் பறிபோய் விடுமோ என்றும் பயந்துள்ளார். மறுபக்கம் பெற்றோர்களிடம் தனது காதலை அந்த பெண் வெளிப்படுத்த ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால், டிரைவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் பிடிவாதமாக அந்த பெண் இருக்கவே, கடைசியில் பெற்றோர்கள் சம்மதம் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

woman love and married her car driver impress by gear changing style

இதன் பின்னர், அந்த பெண்ணுக்கும் டிரைவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இனிமேல் அந்த வீட்டின் டிரைவர் வேலையில் இருந்து விலகி பிசினஸில் அந்த நபர் ஈடுபட பெண்ணின் தந்தை உதவி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், பெண் வீட்டில் இருந்து அவர் ஓட்டிய கார் மற்றும் இன்னொரு பிராண்ட் காரும் பரிசாக கிடைத்துள்ளது.

மேலும் இவர்களின் திருமணம் கடந்த பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தற்போது இதுகுறித்த செய்தி அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | இந்த முள் உரசினாலே இப்படியான எண்ணம் வருமா? .. உலகின் மிக ஆபத்தான செடியா?.. அதை வளர்க்கும் மனிதர் கூறுவது என்ன?

PAKISTAN, WOMAN, LOVE, MARRIED, CAR DRIVER

மற்ற செய்திகள்