"ஹய்யா.. Salary ஏத்திட்டாங்க".. இளம்பெண் போட்ட வீடியோ .. அப்போ பாத்து வந்த E-mail.. நொடியில் மாறிய வாழ்க்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தன்னுடைய சம்பளம் குறித்து வீடியோவில் மகிழ்ச்சியாக பதிவிட்ட இளம்பெண்ணை வேலையை விட்டே நீக்கியிருக்கிறது நிறுவனம் ஒன்று. இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

"ஹய்யா.. Salary ஏத்திட்டாங்க".. இளம்பெண் போட்ட வீடியோ .. அப்போ பாத்து வந்த E-mail.. நொடியில் மாறிய வாழ்க்கை..!

Also Read | "கலெக்டர் ஆகணும்ன்னு ஆசைப்பட்டவரு.." காதல் தோல்வியால் வந்த சோதனை.. 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை..

பணிபுரியும் இடங்களில் ஊதியத்தை அதிகரிப்பது ஊழியர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தான். அதுவும் சமீப ஆண்டுகளில் அனுபவமும் திறமையும் வாய்ந்த பணியாளர்களை தக்க வைக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊதியத்தை கணிசமாக அதிகரித்துவருகின்றன. அதுமட்டும் அல்லாமல், கார், வீடு உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கி தங்களது ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளன பல ஐடி நிறுவனங்கள். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று தனது ஊழியர் ஒருவர் சம்பள விபரத்தை வெளியே சொன்னதால் அவரை வேலையைவிட்டே நீக்கியிருக்கிறது.

சம்பள உயர்வு

டென்வரை சேர்ந்த லெக்ஸி லார்சன் என்பவர் கடந்த மாதம் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், தான் பணிபுரியும் நிறுவனத்தில் தனக்கு சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறியிருக்கிறார் லார்சன். மேலும், அக்கவுன்டிங் துறையில் இருந்து தான் டெக்னாலஜி பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் இதனால் ஊதியம் 70 ஆயிரம் அமெரிக்க டாலர்களில் இருந்து 90,000 அமெரிக்க டாலர்களாக மாறியிருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, தனக்கு இந்த வேலை எப்படி கிடைத்தது? என்பது பற்றியும் வீடியோவில் விளக்கியிருக்கிறார் லார்சன்.

Woman loses higher paying job after disclosing salary in video

அதிர்ச்சி

இதனை தொடர்ந்து வீடியோ வெளியான சில வாரங்களில் லார்சனை பணிநீக்கம் செய்திருக்கிறது அந்த நிறுவனம். நிறுவனம் குறித்த தகவல்களை பொது வெளியில் வெளியிட்டதாகவும் நிறுவனத்தின் விதிமுறைகளை அவர் மீறிவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார் லார்சன். இதுகுறித்து அவர் பேசுகையில்,"வீடியோ வெளியான இரண்டு வாரங்களில் நிறுவனம் என்னை பணியில் இருந்து விடுவித்தது. ஊதிய விபரம் குறித்து வெளியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்" என்றார்.

இந்நிலையில், இது மோசமான முடிவு என்றும், நிறுவனம் இதுகுறித்து எச்சரிக்கை வழங்கலாமலேயே இந்த முடிவை எடுத்து அதிர்ச்சியளிப்பதாகவும் லார்சனின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில், தன்னுடைய சம்பள விபரம் குறித்து வீடியோ வெளியிட்ட பெண் பணியாளரை அந்த நிறுவனம் பணியை விட்டே நீக்கியிருப்பது பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | ODI ஓய்வை அறிவித்த ஸ்டோக்ஸ்.. கோலியின் மனம் உருக வைத்த கமெண்ட்..

JOBS, SALARY, WOMAN

மற்ற செய்திகள்