5 வருஷமா freezer-க்குள்ள ஒரு உருளைகிழங்கை பொத்தி பொத்தி பாதுகாக்கும் பெண்.. காரணத்தை கேட்டு கன்ஃபியூஸ் ஆன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது பிரிட்ஜ்-ல் 5 வருடங்களாக ஒரு உருளை கிழங்கை பத்திரப்படுத்தி வருகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் தான் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லோரி. 51 வயதான இவரும் இவருடைய கணவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தங்களது வீட்டில் இருக்கும் பிரிட்ஜில் ஒரு உருளை கிழங்கை பாதுகாத்து வருகின்றனர். கண்கள், மூக்கு மற்றும் சிரிக்கும் வாய் போன்ற வடிவங்களை கொண்டிருக்கும் அந்த உருளை கிழங்கை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறார்கள் இந்த தம்பதியினர்.
நண்பன்
இதுபற்றி பேசிய லோரி,"நான் கடந்த 2017 ஆம் ஆண்டு சூப்பர் மார்க்கெட் சென்றிருந்த போதுதான் அந்த உருளை கிழங்கை பார்த்தேன். எது என்னை பார்த்து நட்புடன் புன்னகை செய்வது போலவே இருந்தது. ஆகவே, அதனை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். அன்றுமுதல் எங்களது பிரிட்ஜில் அந்த உருளை கிழங்கை நானும் எனது கணவரும் பாதுகாத்து வருகிறோம். நாங்கள் அதற்கு Pete எனப் பெயர் சூட்டியுள்ளோம்" என்றார்.
அதுமட்டும் அல்லாமல், உருளை கிழங்கை புகைப்படம் எடுக்க விரும்பிய அவர், வீட்டில் இருந்த சிறிய மர வீட்டை பயன்படுத்தியிருக்கிறார். அப்போது அவர் எடுத்த அவரது செல்ல உருளை கிழங்கின் புகைப்படம் வைரலானது.
போட்டோ சூட்
இந்நிலையில், மேலும் 5 வருடங்களுக்கு இந்த உருளை கிழங்கை பத்திரப்படுத்த இருப்பதாக கூறும் லோரி," நான் முதன் முதலாக எங்களது Pete-ஐ வாங்கிய தருணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதன் 10 வது ஆண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். ஆகவே, இன்னும் 5 வருடங்களுக்கு நாங்கள் எங்களது உருளை கிழங்கை பாதுகாக்க இருக்கிறோம்" என்றார்.
அமெரிக்காவில் கண், மூக்கு மற்றும் சிரிக்கும் வாய் போன்ற வடிவம் கொண்ட உருளை கிழங்கை தங்களது வீட்டில் ஒருவர் போல தம்பதி பாதுகாத்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Also Read | "மேட்ச் Tight ஆகும்போது அவர் பயந்துடறாரு".. ரிஷப் பண்டை விமர்சித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!
மற்ற செய்திகள்