தன்னுடைய இதயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருக்கும் இளம்பெண்?.. வினோத ஆசை கேட்டு மிரண்டு போன மக்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவர் இதயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்து அதனை வைத்து செய்ய உள்ளதாக சொல்லும் விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜெசிகா மேனிங். இவருக்கு தற்போது 25 வயது ஆவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அந்த பெண்ணின் அறுவை சிகிச்சையும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம், தனது பிறப்பு முதலே பல இதய குறைபாடுகள் ஜெசிகாவுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
இதனால், ஆரோக்கியமான இதயத்தை பெற ஜெசிகாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் பின்னர், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஜெசிகாவின் அசல் இதயத்தை அறிவியல் ஆராய்ச்சிக்காக தானம் செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், சில காரணங்களுக்காக ஜெசிகாவின் இதயத்தை மீண்டும் ஆராய்ச்சியாளர்கள் அவரிடமே திருப்பி கொடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது இதயத்தை ஜெசிகா பத்திரமாக வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் அந்த இதயமானது, சீல் செய்யப்பட்ட பை ஒன்றில் பாதுகாப்பு திரவம் ஒன்றுடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதனை வைத்து வித்தியாசமான ஆசை ஒன்றையும் ஜெசிகா வைத்துள்ளார். தனது பழுது அடைந்த இதயத்திற்கு வித்தியாசமாக விடை கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ள ஜெசிகா, அதனை மண்ணில் புதைத்து அதன் மேல் ஒரு மரத்தை நட வேண்டும் என்றும் விரும்பி உள்ளார்.
மறுபக்கம், புதிய வீடு ஒன்றை வாங்க காத்திருக்கும் ஜெசிகா, அந்த வீட்டின் தோட்டத்தில் தான் தனது இதயத்தை புதைத்து விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த இதயத்தின் மேல் நடப்படும் மரம் அவரது நன்கொடையாளரின் நினைவாக இருக்கும் என்றும் ஜெசிகா கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ அதிக வைரலாகி வரும் சூழலில், பல தரப்பிலான கருத்துக்களையும் ஜெசிகாவின் விருப்பம் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்