Viruman Mobiile Logo top

"30 வருசமா இத யாரும் கவனிக்கலயா?".. பாட்டியின் கல்லறையில் இருந்த வார்த்தை.. முதல் தடவ பாத்ததும் தலை சுற்றி போன 'பேத்தி'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது பாட்டியின் கல்லறையை முதல் முதலாக பார்த்த பெண் ஒருவர், அதில் இருந்த வாசகம் ஒன்றை கண்டு திகைத்து போன சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"30 வருசமா இத யாரும் கவனிக்கலயா?".. பாட்டியின் கல்லறையில் இருந்த வார்த்தை.. முதல் தடவ பாத்ததும் தலை சுற்றி போன 'பேத்தி'

Also Read | "ஆத்தாடி, இந்த ராக்கி கயிறு விலை என்ன இவ்ளோ இருக்கு?!.." கேட்டதும் மிரண்டு போகும் சகோதரிகள்..

இறந்த ஒருவரின் கல்லறை மீது எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் என்பது, அந்த நபரின் முக்கியத்துவம் தொடர்பாக இடம்பெற்றிருக்கும். அப்படி ஒரு மூதாட்டியின் கல்லறையில் இருந்த பிழை தான், பேத்தியின் கவனத்தில் வந்தது மட்டுமில்லாமல், அவரை தலை சுற்றவும் வைத்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த அந்த பெண் பேசுகையில், "எனது பாட்டி தன்னுடைய 40 வயதில் உயிரிழந்தார். அப்பொழுது எனது தாய்க்கு சுமார் 20 வயது இருந்தது. எனது பாட்டி இறந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நான் பிறந்தேன். தன்னுடைய தாயின் இழப்பு தன்னை மிகவும் பாதித்திருந்ததால், அவரின் கல்லறைக்கு எனது தாய் ஒரு முறை கூட சென்றதில்லை. தாய் செல்லாததன் காரணமாக என்னுடைய பாட்டியின் கல்லறை எங்கு இருப்பது என்பது கூட எனக்கு தெரியாமல் இருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், என்னுடைய பாட்டி இறந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, விடுமுறைக்கு வேல்ஸ் பகுதிக்கு வந்திருந்த நான், பாட்டியின் கல்லறைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன். அப்படி நான் அங்கே சென்று எனது பாட்டியின் கல்லறையை போய் பார்த்த போது தான், கல்லறை வாசகம் பொறிக்கப்பட்டு வைத்திருந்த கல்லில் ஒரு தவறு இருப்பதைக் கண்டு ஒரு நிமிடம் நான் அதிர்ந்து போனேன். இதற்கு காரணம், அவர் 'அதிகம் அன்புள்ள பாட்டி' (a dotting grandmother) என்று இருப்பதற்கு பதிலாக, அதில் அவர் ஒரு 'தத்தெடுக்கப்பட்ட பாட்டி' (adopting grandmother) என்ற எழுத்து பிழை இருந்தது. கடந்த 30 வருடமாக, ஒருவர் கூட இதனை கவனிக்கவில்லை என்பதை நினைத்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்" என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

Woman in pain after typo found in grandmother grave

பாட்டியின் கல்லறையில் இருந்தது தொடர்பாக, தன்னுடைய தாயிடமும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை சரி செய்யலாமா அல்லது அப்படியே விட்டு விடலாமா என்றும் தன்னுடைய சமூக வலைதளத்தில் அந்த பெண் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

30 வருடமாக மூதாட்டியின் கல்லறையில் இருந்த தவறை அவரது உறவினர்கள் யாரும் கவனிக்காமல் இருந்து வந்த நிலையில், அவரது பேத்தி முதல் முறையாக அங்கே வந்த போது கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "கோவில்'ல திருடிட்டு போறதுக்கு முன்னாடி.." திருடன் செஞ்ச ஒரே ஒரு சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

WOMAN, PAIN, GRANDMOTHER GRAVE

மற்ற செய்திகள்