'சந்தோசமா ஷாப்பிங் வந்த பெண்'... 'மொத்த சந்தோசத்தை உடைத்த ஒரே ஒரு போன் கால்'... நெஞ்சை உருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சந்தோசமாக ஷாப்பிங் வந்த இடத்தில் திடீரென ஒரு பெண் அமர்ந்து கதறி அழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

'சந்தோசமா ஷாப்பிங் வந்த பெண்'... 'மொத்த சந்தோசத்தை உடைத்த ஒரே ஒரு போன் கால்'... நெஞ்சை உருக்கும் வீடியோ!

உலகம் முழுவதும் கொரோனா ஒரு கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், சில நாடுகள் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள். இருப்பினும் கொரோனாவில் இருந்து தங்களைப் பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வேண்டுமெனப் பல நாட்டு அரசுகளும்  கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் பீஜிங்கின் வணிக வளாகம் ஒன்றில் ஷாப்பிங் செய்வதற்காக ஒரு பெண் வந்துள்ளார்.

அப்போது அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வருகிறது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், ''உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த பெண் என்ன செய்வது எனத் தெரியாமல், அந்த இடத்திலேயே நின்று கொண்டு கதறி அழுகிறார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு தான் என்ன சம்பவம் என அவர்களுக்குப் புரிந்தது.

இதனிடையே மற்றொரு சிசிடிவி காட்சியில் வணிக வளாகத்தின் வெளியே அந்தப் பெண் அமர்ந்திருக்கிறார். அப்போது ஆம்புலன்சில் வரும் சுகாதார ஊழியர் ஒருவர் அந்தப்பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். இந்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த வீடியோக்களை பகிரும் பலரும் அந்தப்பெண் விரைவில் குணமடைய வேண்டுமென்றும், கொரோனா பாதிக்கப்பட்டாலும் மனத்திடத்துடன் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்