Kadaisi Vivasayi Others

நடுவானில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. விமானத்துல எல்லாரும் தூங்கிட்டு இருந்த நேரம் பார்த்து.. பயணி செய்த காரியம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன்: அமெரிக்காவில் இருந்து லண்டன் நோக்கி கிளம்பிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை, சக பயணி  ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தாக  ஹீத்ரோ விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

நடுவானில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. விமானத்துல எல்லாரும் தூங்கிட்டு இருந்த நேரம் பார்த்து.. பயணி செய்த காரியம்

பெண்களுக்கு எதிரான வன்முறை உலகம் முழுவதும் தொடர்கதையாகி வருகிறது. பஸ், ரயில் பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நடுவானில் கேட்ட அலறல் சத்தம்:

விமானம் புறப்பட்டு சிறிது நேரம் கழித்து எல்லாரும் தூங்க தொடங்கியுள்ளனர். எல்லாரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடுவானில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அது ஒரு பெண்ணின் அலறல் சத்தம். உடனே அவரிடம் என்ன நடந்தது என விசாரித்தபோது பிரிட்டனை சேர்ந்த அந்த நபர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்முறை செய்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். எதிர்பாராத நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் அந்த பெண் கடும் அதிர்ச்சியடைந்தார். ஆனால் அந்த நபர் யார் என்பதை அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீசார் தீவிர விசாரணை:

இதனால்  தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான பயண முடிவில் அந்த நபர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின்  புகார் மீது உடனடியாக தீவிரமாக விசாரணை நடத்திய லண்டன் விமான நிலைய போலீசார் மற்றும் தடயவியல் அதிகாரிகள்  பாலியல் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்பட்ட விமானப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை அவர்கள் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சம்பவத்தில் லண்டன் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பு: பெண்கள் இதுபோன்ற அத்துமீறல்களை பெப்பர் ஸ்பிரே உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை உடனே எடுக்கும் விதமாக கையில் வைத்திருப்பது நல்லது.

UNITED AIRLINES, FLIGHT, US, LONDON, லண்டன், யுனைடெட் ஏர்லைன்ஸ், விமானம்

மற்ற செய்திகள்