"பொறந்தது இரட்டை குழந்தைங்க, ஆனா வேற வேற வருசத்துல".. "அட, எப்படி பாஸ் இது நடந்துச்சு?".. சுவாரஸ்ய பின்னணி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தம்பதியர் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இரண்டு குழந்தைகளுக்கும் இடையே உள்ள விஷயம் தான், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

"பொறந்தது இரட்டை குழந்தைங்க, ஆனா வேற வேற வருசத்துல".. "அட, எப்படி பாஸ் இது நடந்துச்சு?".. சுவாரஸ்ய பின்னணி

Also Read | "நாங்க பெற்றோராக போறோம்".. ஆண் தம்பதி மகிழ்ச்சி பதிவு.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!!

அமெரிக்காவை சேர்ந்தவர் காளி ஜோ ஸ்காட். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, காளி ஜோ கர்ப்பம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியன்று பிரசவ வலி காரணமாக மருத்துவமனையிலும் காளி ஜோ அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நள்ளிரவிலேயே அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது காளி ஸ்காட்டிற்கு முதல் பெண் குழந்தை டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்கு பிறந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஜோவிற்கு பிரசவ வலி ஏற்பட, இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்றை அவர் மீண்டும் பெற்றெடுத்துள்ளார்.

Woman gives birth to twins in two different years

இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சூழலில், இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இது ஒரு அரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அன்னி ஜோ என்றும், 2023 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு எஃபி ரோஸ் என்றும் அவர்கள் பெயர் சூட்டி உள்ளனர்.

வெவ்வேறு ஆண்டுகளில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை மிக மகிழ்ச்சியுடனும் அந்த தம்பதியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். ஒரு குழந்தை டிசம்பர் 31 ஆம் தேதியும், மறு குழந்தை ஜனவரி 1 ஆம் தேதி பிறந்துள்ளதையும் குறிப்பிட்ட காளி ஜோ, இரட்டை மகிழ்ச்சியில் தற்போது இருப்பதாகவும் குழந்தைகளை இணைக்கும் புத்தாண்டை போல அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Woman gives birth to twins in two different years

ஒரு சில நிமிட வித்தியாசங்களில் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் புத்தாண்டு நடுவே இந்த சம்பவம் நடந்த நிலையில், வருட வித்தியாசத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள விஷயம், இணையத்தில் அதிக வைரலாகி வருகிறது.

Also Read | திருமணமான அன்றே கணவரை பற்றி தெரியவந்த பரபரப்பு உண்மை.! அதே நாளில் கொழுந்தனை 2வது திருமணம் செய்த இளம்பெண்..!

WOMAN, BIRTH, TWINS

மற்ற செய்திகள்