Veetla Vishesham Mob Others Page USA

மது போதையில் கார் ஓட்டி ஒரு குடும்பமே சாக காரணமான பெண்.. 9 வருட சிறை தண்டனைக்கு பின் இப்படி ஒரு நூதன விடுதலையா.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மதுபோதையில் கார் ஓட்டிய பெண்மணி ஒருவருக்கு 9 வருடம் தொடர்ச்சியான சிறை தண்டையைத் தொடர்ந்து தற்போது  statutory release-ல் விடுதலை கிடைத்துள்ளது.

மது போதையில் கார் ஓட்டி ஒரு குடும்பமே சாக காரணமான பெண்.. 9 வருட சிறை தண்டனைக்கு பின் இப்படி ஒரு நூதன விடுதலையா.?

Also Read | நைட்டு 10.30 மணி... கண்ணு முழிச்சு பார்த்தா ஜன்னல் வழியா கண்ட காட்சி.. பதைபதைத்து போன பெண்.!

சிறை தண்டனை என்றாலே, செய்த குற்றத்துக்கு கிடைக்கும் தண்டனை தான். ஒரு தவறு செய்யும் ஒருவரை அந்த தவறு குறித்து மன ரீதியலான புரிதலுக்கு வருவதற்காக அவரை தனிமைப்படுத்தும் விதமாக அவரை சிறையில் அடைப்பதுதான் அதனுள் இருக்கும் உளவியல்.

அப்படி இருக்க, சிறை தண்டனையில் இருந்து வெளியே வந்தும் வாழ்நாள் முழுவதும் செய்த தவறை நினைத்துக்கொண்டே இருக்கும் விதமாக மற்றும் இனியும் வாழ்நாள் முழுவதும் செய்த தவறை திரும்ப செய்ய கூடாது என்பது நினைவில் இருக்கும் விதமாக ஒரு நூதன விடுதலை கனேடிய பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

ஆம், கனடாவில் மதுபோதையில் கார் ஓட்டி உண்டான விபத்தில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பமே மரணமடைய காரணமாக இருந்த பெண் ஒருவருக்கு சுமார் 9 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அளித்த பின்னர், தற்போது அவர் statutory releaseல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Woman gets statutory release who killed in a family drunken driving

இந்த statutory release என்பது முன்பே குறிப்பிட்டது போல, குற்றவாளியின் தண்டனை காலம் முடிந்து வெளியே வருவதுதான் என்றாலும், இது வழக்கமான விடுதலை போல் அல்ல. இந்த சட்டத்தின் கீழ் வெளிவிடப்படும் குற்றவாளிகள் சமூகத்தில் தாங்கள் வாழப்போகும் மீதமிருக்கும் வாழ்நாளில் வாழ்ந்துகொண்டே, தங்கள் தவறுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

3-ல் 2 பங்கு சிறைதண்டனை அனுபவித்தவர்களுக்கு வழங்கப்படும் இந்த statutory release தான் Catherine McKay என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆம், Chanda மற்றும் Jordan தம்பதியின் 4 பேர் கொண்ட குடும்பத்தை குடிபோதையில் கார் ஏற்றி விபத்துக்குள்ளாக்கி, அவர்கள் மரணம் அடைய காரணமாக இருந்ததால் கடந்த 2016ல் நீதிமன்றத்தால் Catherine-க்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இப்போது 3ல் 2 மடங்கு சிறை தண்டனையை அனுபவித்த Catherine-க்கு statutory release வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். அத்துடன் இவர் இனி மது, போதை மருந்துகளை எடுத்து கொள்ளவும், வாகனம் ஓட்டவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read | ஒத்த விரல் தான்.. சும்மா 8 விநாடிக்கு.. 129.5 கிலோவ தூக்கிப் பிடிச்ச மனுஷன்.. யாருய்யா இவரு.?

STATUTORY RELEASE, CATHERINE MCKA

மற்ற செய்திகள்